நள்ளிரவு திடீரென்று வீட்டில் பெண்ணிற்கு மர்ம நபர் செய்த காரியம்..

இரவில் தூங்கி கொண்டிருந்த பெண்ணின் காதுகளை அறுத்து நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஆதம்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த ஏழுமலை இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் மொட்டை மாடியில் தூங்கியபோது அவரின் மனைவி சுலோச்சனா உடன் சென்று தூங்கியுள்ளார்.

அப்போது நள்ளிரவு நேரத்தில் கணவன் மனைவி நன்கு தூங்கி கொண்டிருந்தபோது திடீரென்று மர்ம நபர் மொட்டை மாடியில் நுழைந்துள்ளான், சுலோச்சனா கழுத்தில் கத்தியை வைத்து நகைகளை கழற்றி கொடுக்கும்படி கூறியுள்ளான்.

இதனால் பயந்துபோன சுலோச்சனா கழுத்திலிருந்த நகையை கழற்றி கொடுத்துவிட்டார். ஆனால் காதில் இருந்த தோடுகளை கழற்றி கொடுக்காமல் இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த திருடன் தான் வைத்திருந்த கத்தியால் இரண்டு காதுகளையும் அறுத்து தோடை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளான்.

இதில் காதை பறி கொடுத்த சுலோச்சனா வலி தாங்க முடியாமல் கதறியுள்ளார். இதனையடுத்து அவரை கணவன் ஏழுமலை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

Comments

comments

More Cinema News: