Connect with us
Cinemapettai

Cinemapettai

அடுத்தடுத்த ரிலீஸ் ஆகும் இரண்டு விஜய்சேதுபதி படங்கள்.

vijaysethupathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அடுத்தடுத்த ரிலீஸ் ஆகும் இரண்டு விஜய்சேதுபதி படங்கள்.

அடுத்தடுத்த வாரத்தில் இரண்டு விஜய் சேதுபதி படங்கள் தொடர்ச்சியாக ரிலீஸ் ஆகலாம் எனத் தெரிகிறது.‘ரேனிகுண்டா’ பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘கருப்பன்’.

இந்தப் படத்தில் ஹீரோயினாக தன்யா நடிக்க, வில்லனாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். இந்தப் படம் செப்டம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது.

இந்நிலையில், விஜய் சேதுபதி நடித்து நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் ‘புரியாத புதிர்’, செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மெல்லிசை’ என்று முதலில் பெயரிடப்பட்டிருந்த இந்தப் படத்தில், காயத்ரி ஹீரோயினாக நடித்துள்ளார்.vijaysethupathi

இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகுமா? இல்லை, ‘கருப்பன்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகுமா என்பது தெரியவில்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top