Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal-biggboss4

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸில் உள்ள மொட்ட பாஸ் ஆரம்பிச்ச அடுத்த பிரச்சனை.. சரமாரியாக கொளுத்திப் போடும் பிக் பாஸ்!

விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோவான ‘பிக் பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சி நான்கு நாட்களை கடந்த நிலையில், இன்று ஐந்தாம் நாளாக ஒளிபரப்பப்பட உள்ளது.

மேலும் இந்த ஆண்டு 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டனாக ரம்யா பாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து வழக்கம் போல் மற்ற போட்டியாளர்களை சமையல், சுத்தம் செய்தல் மற்றும் பாத்ரூம் கிளீனிங் என தனித்தனியான குழுக்களாக பிரித்தார் ரம்யா.

இவ்வாறு இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சுரேஷ் சக்ரவர்த்தி பேசியவிதம் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி நிகழ்ச்சியை பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது சமையல் செய்யும் குழுவில் நடிகை ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, சனம் செட்டி மற்றும் அனிதா சம்பத் என நான்கு பேர் இருந்தனர். இதில் சுரேஷ் சக்கரவர்த்திக்கும், அனிதா சம்பத்திற்கும் இடையே எச்சி பிரச்சனையால் ஏற்பட்ட குடுமிப்பிடி சண்டை இன்றுவரை முடிந்தபாடில்லை.

இந்நிலையில் இந்த சண்டை நேற்று அதிகமானதால் குக்கிங் டீமிலிருந்து தான் விலகி விடுவதாக சுரேஷ் மற்ற போட்டியாளர்களிடம் கூறியுள்ளார். இதை மற்ற போட்டியாளர்கள் ஏற்க மறுத்தனர்.

இதை தொடர்ந்து கோபமாக கார்டன் ஏரியாவுக்கு சென்ற சுரேஷ், ‘நான் பாத்ரூம் சுத்தமாக கிளீன் பண்ணுவேன், என்று சற்று ஆவேசமாக கூறிவிட்டு அங்கிருந்து செல்லும் போது, மற்ற போட்டியாளர்களிடம், ‘உப்பு போட்டு சோறு திங்கற எவனும் அந்த டீமில் இருக்க மாட்டான்’ என்று  கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார்.

suresh-big-boss-1

suresh-big-boss-1

மேலும் மற்ற சீசன்களை விட இந்த சீசன் பிக் பாஸ் ஷோ ஆரம்பித்த முதல் வாரத்திலேயே மோதல் பிரச்சினைகள் ஆரம்பித்து ரசிகர்களின்  விறுவிறுப்பை பெருமளவில் தூண்டியுள்ளது.

Continue Reading
To Top