திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024

கொழுந்தனை வறுத்தெடுக்கும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தாண்டவமாடும் அடுத்த பிரச்சனை!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு குழந்தை இல்லை என்ற பிரச்சனை தற்போது தலைவிரித்தாடுகிறது. ஏனென்றால் இயற்கையான முறையில் முல்லை கருத்தரிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதால், செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்க முயற்சிக்கின்றனர்.

இதற்காக சுமார் 5 லட்சத்திற்கும் மேலாக மருத்துவ செலவு ஏற்படுவதால், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தால் இதை அவ்வளவு எளிதாக சமாளிக்க முடியவில்லை. இதனால் மூர்த்தி பார்ப்போரின் இடமெல்லாம் கடன் வாங்கி இந்த சிகிச்சையை மேற்கொள்ள கதிருக்கு ஊக்கமளித்து பணத்தை பிரட்டி கொடுக்கிறார்.

ஆனால் கடன் வாங்கி இந்த சிகிச்சையை மேற்கொள்வது சரி இல்ல என மீனா தொடக்கத்திலிருந்தே வலியுறுத்துகிறார். அதுமட்டுமின்றி கதிர் காதுபட கேட்கும்போதே மீனா அடிக்கடி இதைப் பற்றி பேசுவதால் கதிர் கலக்கம் அடைகிறான்.

அதுமட்டுமின்றி தனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இப்படி கடன் வாங்குவது எங்கு போய் முடிவது என்றே தெரியாது எனவும் தன்னுடைய ஒரு வயது மகளையும் இந்த விஷயத்தில் மீனா இழுத்து விடுகிறாள். எனவே தங்களால் குடும்பம் கஷ்டப்படுகிறது என மன உளைச்சலுக்கு ஆளாகும் கதிர், இந்த சிகிச்சை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறான்.

ஏனென்றால் முல்லை இந்த விஷயத்தில் எப்படியாவது குழந்தையை பெற்றெடுத்த விட வேண்டும் என்று விடாபிடியாக இருப்பதால், ஒருவேளை சிகிச்சை பலனளிக்காமல் நெகட்டிவ் ரிசல்ட் கிடைத்துவிட்டால், மறுபடியும் நம்முடைய குடும்பத்தால் ஐந்து லட்சம் செலவு செய்ய முடியாது என்ற குழப்பமும் கதிருக்கு இருக்கிறது,

ஆகையால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தைப் போலவே சின்னத்திரை ரசிகர்களும் முல்லைக்கும் செயற்கை முறையில் கருத்தரிக்கும் சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News