வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அடுத்த நயன்தாரா இவர்தான் .. ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி பரவிக் கொண்டிருக்கும் ஒரு உண்மை

ஐஸ்வர்யா ராஜேஷ் வருடத்திற்கு 10 படங்கள் நடித்தாலும் அதில் எட்டு படங்கள் ரசிகர்கள் பேசும்படி அமைந்து விடுகிறது. அதிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். போறபோக்க பார்த்தா அடுத்த நயன்தாராவாக ஐஸ்வர்யா ராஜேஷ் மாறிவிடுவார் போல. அந்த அளவுக்கு அவர் பார்த்து பார்த்து படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த 6 படங்களை பார்க்கலாம்.

வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் : தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா, ராசி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர். இப்படத்தில் விஜய் தேவர்கொண்டா எழுதிய முதல் கதையில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். அதில் கிராமத்து வெள்ளந்தியான மனைவியாக இயல்பான நடிப்பை ஐஸ்வர்யா வெளிப்படுத்தியிருந்தார்.

க/பெ ரணசிங்கம் : விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான க/பெ ராணசிங்கம் படத்தில் வெளிநாட்டில் உயிரிழந்த தனது கணவரின் உடலை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர போராடும் சிங்கப் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். அவருடைய எதார்த்தமான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

திட்டம் 2 : ஒரு க்ரைம் த்ரில்லர் படமான திட்டம் 2 படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்பெக்டராக நடித்து இருந்தார். ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை மிக பரபரப்பாக யாரும் கணிக்க முடியாத வகையில் அடுத்தடுத்து ட்விஸ்ட் வந்து ரசிகர்களை பிரமிக்கச் செய்த படம் இது. பல பெண்களுக்கு முன்னுதாரணமாக ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நடித்திருந்தார்.

தி கிரேட் இந்தியன் கிச்சன் : ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் குடும்ப கதையாக வெளியான திரைப்படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். ஒரு குடும்பம் பெண்ணின் உழைப்பை எப்படி சுரண்டுகிறது என்பதே இப்படத்தின் மையக் கருத்தை. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கான கதாபாத்திரத்தின் தத்ரூபமாக நடித்து இருந்தார்.

கனா : அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் வெளியான கனா படம் கிரிக்கெட் மற்றும் விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தந்தையின் ஆசைக்காக கிரிக்கெட் வீரராக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பல போராட்டங்களை சந்திக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இறுதியில் அதில் வெற்றிகண்டார் என்பதே இப்படத்தின் கதை.

எங்க வீட்டுப் பிள்ளை : அண்ணன், தங்கை சென்டிமென்டை வைத்து தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன், தங்கையாக நடித்து வெளியான திரைப்படம் எங்க வீட்டுப் பிள்ளை. இப்படத்தில் அண்ணன் மற்றும் கணவன் இடையே நடக்கும் பிரச்சனையில் அந்தப்பெண் எப்படி நடந்து கொள்வார் என்பதை கண்முன்னே காண்பித்தார் ஐஸ்வர்யா.

- Advertisement -

Trending News