விஜய்யின் இடத்திற்கு வரும் அடுத்த பிரபலம்.. தயாரிப்பாளர்களிடம் செம உஷாரான பார்ட்டி!

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கும் தளபதி விஜயின் படங்களை போன்றே இளம் நடிகர் ஒருவரின் படங்களும் குழந்தைகள், பெண்களை வெகுவாக ஈர்த்து அவர்களை குடும்பத்தோடு திரையரங்கில் குவியச் செய்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுப்பதால் இவருடைய படங்கள் தல அஜித்,  தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்களுக்கு கடும் போட்டியாக வருகிறது.

அத்துடன் தற்போது சிவகார்த்திகேயன் அவரை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் உஷாராக இருக்கிறார். இந்த படத்தின் பட்ஜெட் போக அவருடைய சம்பளம் அவர்களால் கொடுக்க முடியுமா என்பதை முதலில் கணிக்கிறார். மேலும் அவர் ஃபர்ஸ்ட் காப்பி நாங்கள் எடுத்து தருகிறோம் என்று ஒரு வியாபாரம் பேசுகிறார்கள்.

அதுமட்டுமின்றி அந்த தயாரிப்பாளர் சொந்த பணத்தில் படமெடுக்கிறார் இல்லை வேறு யாரிடமாவது பைனான்ஸ் வாங்கி படமெடுக்கிற என்பதையும் கவனித்துக் கொள்கிறார். இப்பொழுது அவர் படம் என்றால் 100 கோடி பட்ஜெட் தான். அதற்கு குறைவான பட்ஜெட் படங்களை அவர் தேர்வு செய்வதில்லை

சமீபத்தில் அவருடைய படங்கள் ஆகிய டாக்டர் மற்றும் டான் 100 கோடி வசூல் செய்தது. கடந்த வருடம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர் அளவிற்கு, சமீபத்தில் புதுமுக இயக்குனரான சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் டான் படம் இல்லாவிட்டாலும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனால் ஏதோ ஒன்றால் சிவகார்த்திகேயன் காப்பாற்றப்படுகிறார். மேலும் படங்களை தேர்வு செய்து நடிப்பதிலும் தயாரிப்பாளர்களிடம் உஷாராக இருப்பதை வைத்து பார்த்தால் அடுத்து விஜயின் இடத்தை சிவகார்த்திகேயன் தான் தக்க வைத்துக் கொள்வார் என்று பரபரப்பாக பேசி வருகின்றனர்.

தொலைக்காட்சியிலிருந்து மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆகவும், காமெடி நடிகராகவும், தொகுப்பாளராகவும் இருந்த சிவகார்த்திகேயனின் இந்த அசுர வளர்ச்சி அவருடைய உழைப்புக்கு கிடைத்த பரிசாகவே பார்க்கப்படுகிறது. இவருடைய தன்னடக்கம், எளிமை, இவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் இதை வைத்துப்பார்த்தால் இவர்தான் அடுத்த தளபதி இடத்தை பிடிக்கப் போகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்