பிரபல தயாரிப்பாளர் தற்கொலைக்கு ரஜினிகாந்த் காரணமா.? பகிரை கிளப்பி அப்போதைய உண்மை சம்பவம்

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்து இன்று முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். ஆரம்பகாலத்தில் இவரின் திரைப்படங்களை இவருடைய அண்ணன் ஜி வெங்கடேஸ்வரன் தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளியிட்டு வந்தார்.

அப்படி இவர்கள் கூட்டணியில் மவுனராகம், அக்னி நட்சத்திரம், அஞ்சலி உள்ளிட்ட படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. அதைத்தொடர்ந்து அவர் தன்னுடைய ஜிவி பிலிம்ஸ் வழியாக மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களையும் தயாரிக்க ஆரம்பித்தார். ஆனால் அவரின் கெட்ட நேரமோ என்னவோ அப்படி தயாரித்த பல திரைப்படங்கள் அவருக்கு பெருத்த நஷ்டத்தை கொடுத்தது.

இதனால் அவர் பல கடன் நெருக்கடிக்கு ஆளாகி தவித்து வந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு இருந்த பொருளாதார நெருக்கடியை தாங்க முடியாமல் அவர் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். கடந்த 2003ஆம் ஆண்டு அவர் தன்னுடைய வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே மிகுந்த அதிர்ச்சி அடைந்தது. மேலும் அவரின் மரணம் தற்கொலையா, கொலையா என்பது போன்ற பல விவாதங்கள் அப்போது நடந்தேறியது. இது தவிர அவரின் மரணத்திற்கு ரஜினிகாந்த் ஒரு வகையில் காரணம் என்று அப்போது பத்திரிக்கைகளில் பரபரப்பு செய்தியாக எழுதப்பட்டது.

ஏனென்றால் ஜி வி நடிகர் ரஜினிகாந்தின் தளபதி திரைப்படத்தை தயாரித்து இருந்தார். இதனால் ரஜினி ஏன் அவருக்கு உதவி செய்யவில்லை என்றும் அந்த பத்திரிகை கேள்வி எழுப்பியது. இது ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

ஆனால் உண்மையில் அவருடைய மரணத்திற்கு யாரும் காரணமில்லை. எப்படி என்றால் ஜிவி தன்னுடைய மனக்கஷ்டத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பாதவர். சொல்லப்போனால் அவருடைய தம்பியான மணிரத்னத்துக்கு கூட அவர் இவ்வளவு கடன் நெருக்கடியில் இருக்கிறார் என்ற விஷயம் தெரியாமல் இருந்துள்ளது.

ஒருவேளை அவர் தன்னுடைய கஷ்டத்தைப் பற்றி ரஜினிக்கு தெரிவித்து இருந்தால் நிச்சயம் அவர் உதவி செய்திருப்பார். ஆனால் அவர் அப்படி செய்யாமல் தன்னுடைய கஷ்டத்தை தனக்குள்ளே வைத்துக் கொண்டு இறுதியில் மரணத்தை தேடி போய் விட்டார். இதனால் கடைசி வரை அவரின் மரணத்திற்கு காரணம் தெரியாமலே அனைவரும் இருந்து விட்டனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்