Tamil Cinema News | சினிமா செய்திகள்
டாப் 10க்குள் தல அஜித்.. சும்மா விடுவார்களா ரசிகர்கள்.. ட்ரென்ட்டிங்கில் பறக்குது
தமிழ் சினிமாவில் யாருடைய உதவியும் இல்லாமல் திறன் தன்னம்பிக்கையை மட்டுமே விதையாக கொண்டு மரமாக முளைத்தவர் தல அஜித். தமிழ் சினிமாவில் மகுடம் சூடாத வசூல் சக்கரவர்த்தி. இந்த ஆண்டில் மட்டும் இரண்டு மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
தல அஜித் சினிமாவையும் தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ் போன்ற தனிச்சிறப்பான போட்டிகளில் அதிக ஆர்வம் உள்ளவர். அதேபோல் தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டிகள் எங்கு நடந்தாலும் அதில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் குறிப்பிட்ட புள்ளியை பெற்று அதன்பிறகு டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றார்.
அந்த போட்டியில் கலந்துகொண்ட தல அஜித் டாப்-10 க்குள் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். தல அஜித் சினிமாவையும் தாண்டி நல்ல மனிதராக அனைவருக்குமே பிடிக்கும்.
அவருடைய இந்த தனித்துவமான விஷயங்கள் அவரை மேன்மேலும் வளர்த்துக் கொண்டே போகிறது. இவருடைய இந்த விஷயங்கள் பிற்காலத்தில் அவரது ரசிகர்களை ஊக்குவிக்கும் விதமாக கூட இருக்கலாம்.

ajith-rifel
வாழ்த்துக்கள் தல அஜித் சார்..
