வலிமை படத்தால் ஏற்பட்ட புதிய மாற்றம்.. அஜித், எச்.வினோத்துக்கு குவியும் பாராட்டு

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான வலிமை திரைப்படம் சிறந்த திரைக்கதைக்காக அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. படத்தில் இடம் பெற்றுள்ள பல ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளையும், அஜித்தின் நடிப்பையும் தற்போது பலரும் புகழ்ந்து பேசி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தப் படத்தைப் பார்த்து இயக்குனர் வினோத்தை மனதார பாராட்டி இருக்கிறார். அதாவது இந்தப் படத்தில் வினோத் நகர்ப்புற இடங்களில் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்களை மையமாக வைத்து இயக்கி இருந்தார்.

பைக்கில் சென்று பொதுமக்களிடம் செயின் பறிப்பவர்கள், ரேஸ் என்ற பெயரில் கொலை செய்பவர்கள் பற்றியும், அவர்களை யார் வழி நடத்துகிறார்கள் என்பது பற்றியும் அவர் வலிமை திரைப்படத்தில் காட்டியிருந்தார். மேலும் ஒருவரை குடும்பத்தில் இருந்து ஒதுக்குவது, அவர்கள் எடுக்கும் தவறான முடிவு என கதை களத்தை சிறப்பாக செயல்படுத்தி இருப்பார்.

இவரின் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்திலும் இதுபோன்று சென்னையில் நடக்கும் பல அதிரடி குற்ற சம்பவங்களை மையப்படுத்தி எடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். தற்போது இந்த வலிமை திரைப்படமும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை கொடுக்கும் வகையில் இருந்தது.

இதனால்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த படத்தின் திரைக்கதையை மனமார பாராட்டியுள்ளார். மேலும் இப்படத்தில் வந்த சம்பவங்கள் அனைத்தும் சென்னையில் தற்போது உண்மையாகவே நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ரசிகர்களும் வினோத்தை பாராட்டியதுடன் ஒரு படத்தினால் சமுதாயத்தில் நல்ல மாற்றம் உருவாகிறது எனவும் சமூக வலைத்தளங்களில் வலிமை திரைப்படத்தை புகழ்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்