Tamil Cinema News | சினிமா செய்திகள்
பழைய குருடி கதவ திறடி என ஹரியுடன் மீண்டும் கூட்டணி போட்ட முன்னணி நடிகர்.. போலீஸ் மட்டும் வேண்டாமே!
தமிழ் சினிமாவில் இயக்குனர் ஹரி-சூர்யா இருவரின் கூட்டணியில் ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய ஐந்து சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த வகையில் தற்போது அருவா படமும் இதே கூட்டணியில் உருவாக இருந்தது. ஆனால் ஒரு சில கருத்து வேறுபாட்டினால் இந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார். அதன்பின் இயக்குனர் ஹரி, அருண் விஜய்யை வைத்து அருவா படத்தை இயக்கப் போவதாகவும் அண்மையில் தகவல்கள் கசிந்தது.
ஆனால் தற்போது சூர்யாவிற்கு பதிலாக சியான் விக்ரம் ‘அருவா’ படத்தின் கதாநாயகனாக நடிக்க போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை ராசி கண்ணா கமிட்டாகி உள்ளதாகவும் தெரிகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
எனவே இந்த புதிய கூட்டணியில் உருவாகவிருக்கும் அருவா படத்தின் தலைப்பு மற்றும் படத்தின் முழு விவரங்களையும் விரைவில் ஹரி வெளியிடுவதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

hari-vikram-cinemapettai
மேலும் இயக்குனர் ஹரி மற்றும் சியான் விக்ரம் கூட்டணியில் அருவா படம் உருவானால் நிச்சயம் படம் வேற லெவல்ல இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் தப்பி தவறி கூட போலீஸ் கதையை மீண்டும் எடுக்க வேண்டாம் என ஹரிக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
