fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அரபிக்கடலில் உருவான ஷிகா புயல்.. 20 அடி வரை உயரும் அலைகள்

arabic-storm

India | இந்தியா

அரபிக்கடலில் உருவான ஷிகா புயல்.. 20 அடி வரை உயரும் அலைகள்

அரபிக்கடலில் தற்போது ஷிகா புயல் உருவாகியுள்ளது. இது தற்போது ஓமன் நாட்டை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு துறை, இன்று காலையில் ஷிகா என்ற பெயரில் அரபிக்கடலில் புயல் ஒன்று உருவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புயல் சின்னம், தற்போது ஓமனில் இருந்து 760 கிலோ மீட்டர் தொலைவிலும், தென்மேற்கில் சுமார் 500 கிலோமீட்டர் தொலைவிலும், கராச்சியில் இருந்து 305 கிலோமீட்டர் தொலைவிலும் தற்போது நிலைகொண்டுள்ளது.

இந்த புயல் மேற்கு நோக்கி நகர்ந்து புதன்கிழமை காலையில் ஓமன் நாட்டை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலால் அரபிக்கடல் ஓரத்தில் சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்பட்டு உள்ளது. இந்த புயலினால் ஏற்படும் அலைகள், 8 முதல் 20 அடி வரை உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் கரை பகுதிகளில் உள்ள மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது,

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.இதனால் தெலுங்கானா கடலோர பகுதிகளிலும், கர்நாடகாவில் மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் சில நாட்களுக்கு தமிழ்நாடு, தெலுங்கானா கடற்கரை பகுதிகள், கர்நாடகா, மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. செப்டம்பர் மாதம் அரபிக்கடலில் உருவாகும் புயல், தென்மேற்கு பருவமழை முடிவடைவதை குறிப்பிடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top