Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாகுபலி தயாரிப்பாளர்களுக்கு மிரட்டல் விட்ட மர்ம கும்பல்! பின்னணியில் யார்
ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி 2 கடந்த மாதம் உலகம் முழுக்க வெளியானது. இந்தியாவில் பல மொழிகளிலும் இப்படம் வெளியிடப்பட்டது.
ஹிந்தியில் இந்த படத்தின் இணை தயாரிப்பாளரான கரண் ஜோஹர் மற்றும் தயாரிப்பாளர் ராகவேந்திர ராவ் ஆகியோருக்கு இணையதளம் மூலம் 6 பேர் கொண்ட மர்ம கும்பலிடமிருந்து மிரட்டல் வந்தது.
இதில் தாங்கள் பாகுபலி 2 படத்தில் உண்மையான பிரதியை வைத்துள்ளோம். நாங்கள் இணையதளத்தில் வெளிவிடாமல் இருக்க ரூ 15 லட்சம் தரவேண்டும் என எச்சரித்துள்ளார்கள்.
ஹிந்தி படக்குழு போலிசில் புகார் அளித்துவிட்டு, போன் மூலமாக கும்பலை தொடர்பு கொண்டுள்ளனர். தொலைபேசி எண்ணை கொண்டு போலிசார் ஹைதராபாத்தை சேர்ந்த ராகுல் மேத்தாவை கைது செய்துள்ளனர்.
இவனோடு 5 பேருக்கு தொடர்பிருப்பதாகவும் அதில் ஒருவன் பீகாரில் உள்ள சினிமா தியேட்டர் உரிமையாளர் என்பதும் தெரியவந்துள்ளது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
