வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

தந்தையாலேயே கொடூரமாக கொல்லப்பட்ட அம்மா.. யாரும் அறியாத பிக் பாஸ் போட்டியாளரின் மறுபக்கம்

Bigg Boss Season 7: கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த சீசன்களை ஒப்பிடும்போது இந்த சீசனில் அதிகம் தெரிந்த முகங்கள் பங்கு பெற்றுள்ளனர். முதல் வாரமே அனன்யா வெளியேறிய நிலையில் பவா செல்லதுரை தாமாகவே முன்வந்து பிக் பாஸ் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தார்.

இந்நிலையில் மீதி போட்டியாளர்கள் விளையாட்டை சிறப்பாக விளையாண்டு வருகிறார்கள். இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்களின் கடந்த கால கதை மிகவும் வேதனை அளிக்கும் விதமாக இருந்திருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சிகளும் மிகுந்த துயரத்தை போட்டியாளர் ஒருவர் அனுபவித்து இருக்கிறார்.

அதாவது முதல் வாரமே ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்த பிரதீப் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் இவரது புன்னகைக்கு பின்னால் பல வேதனையான விஷயங்கள் அடங்கி இருக்கிறது. அம்மா மீது அதீத அன்பு அன்பு வைத்திருக்கிறார் பிரதீப்.

இந்நிலையில் குடிகார தந்தையால் பிரதீப்பின் அம்மா எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். நாளடைவில் அவருடைய தந்தையும் மதுப்பழக்கத்திற்கு மோசமாக அடிமையாகி உயிரிழந்து விட்டாராம். இவ்வாறு பெற்றோரை இழந்து தவித்த பிரதீப்புக்கு இரண்டு காதல் தோல்விகளும் வந்து போய் உள்ளது.

அதாவது ஒரு பெண்ணை 7 வருடமாக உருகி உருகி பிரதீப் காதலித்த நிலையில் பிரேக் அப் ஆகிவிட்டதாம். இதிலிருந்து மீண்டு வந்து வேறு ஒரு காதல் பிரதீப்புக்கு முளைக்க அதுவும் சில வருடங்களிலேயே முடிவு பெற்றது. இவ்வாறு தொடர்ந்து தோல்விகளையும், வேதனையும் மட்டுமே பிரதீப் சந்தித்து வந்திருக்கிறார்.

ஆனால் இப்போது பிரதீப் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்பதை அவரே கூறி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய வாய்ப்பாக பிக்பாஸ் வீட்டுக்கும் சென்றிருக்கிறார். ஆகையால் இந்நிகழ்ச்சியை சிறப்பாக விளையாண்டால் இனி கண்டிப்பாக அவரின் வாழ்க்கையில் பிரகாசம் வீசும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -

Trending News