CWC 5: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகிவிட்டார். சேனலின் ஆஸ்தான தொகுப்பாளினியான பிரியங்கா மீது பகிரங்க குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். இதற்கு அடுத்து மணிமேகலைக்கு விஜய் டிவியில் வாய்ப்பு கிடைக்குமா என்பதே பெரிய சந்தேகம்தான்.
சீசன் ஆரம்பித்து கடந்த சில மாதங்களாக மணிமேகலை தொகுப்பாளினியாகவும், பிரியங்கா போட்டியாளராகவும் நம் கண்களுக்கு சாதாரணமாக தான் தெரிந்தார்கள். உட்கட்சி பூசல்கள் நடந்து வந்தது மணிமேகலை வாயைத் திறந்த பிறகு தான் தெரியும்.
மணிமேகலை சனிக்கிழமை இரவு தான் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டதாக தன்னுடைய யூடியூப் சேனல், பேஸ்புக் பக்கம் போன்றவற்றில் பகிர்ந்திருந்தார். அன்றைய தினம் தான் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் செமி பைனல் ரவுண்டு முதல் எபிசோடு ஒளிபரப்பப்பட்டது.
இந்த வார எபிசோடை மிஸ் பண்ணவங்க தெரிஞ்சுக்கோங்க
அந்த எபிசோடை பார்க்காதவர்களுக்கு தான் இந்த செய்தி. பார்த்தவர்கள் கண்டிப்பாக இந்த விஷயத்தை கவனித்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. வழக்கம் போல நிகழ்ச்சியை ஆரம்பித்தது மணிமேகலை மற்றும் ரக்சன் இருவரும் நடுவர்களை அழைத்தார்கள்.
அதன்பின்னர் ஒரு போட்டியாளர்களாக அழைக்கும் போது மணிமேகலை பிரியங்கா பெயரை சொல்லவில்லை. ரக்சன் தான் பிரியங்காவை அழைத்தார். பிரியங்காவுடன் மணிமேகலை எந்த வார்த்தையும் பேசவில்லை.
அதன் பின்னர் திடீரென ரக்சன் இனி மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் தொடர மாட்டார் என சொன்னார். மீடியாவுக்கு பழக்கப்பட்ட செஃப் தாமு எதுவும் நடக்காதது போல் முகபாவனையை வைத்திருந்தார். இதெல்லாம் பழக்கப்படாத மாதம் பட்டி ரங்கராஜன் முகத்தில் திகில் அப்படியே தெரிந்தது.
போட்டியாளர்கள் அத்தனை பேரும் அப்படியே உறைந்து போயிருந்தார்கள். பிரியங்கா சகஜமாக இருப்பது போல் தன்னை காட்டிக் கொண்டார். தன்னுடைய கோபத்தை எப்படி வெளிப்படுத்துவது என தெரியாமல் காமெடியாக ராமர் மீது கோபப்படுவது போல் மொத்தத்தையும் கொட்டி தீர்த்தார்.
சண்டை போட்டவர்கள் தான் எப்போதுமே சகஜமாக இருப்பது போல் காட்டிக் கொள்வார்கள். அப்படித்தான் பிரியங்கா அந்த எபிசோடு முழுவதும் எல்லோரிடமும் அன்பாக இருப்பது போல் தன்னை காட்டிக் கொண்டார்.
உண்மையிலேயே மணிமேகலை இப்படி மக்கள் முன்பு தன்னை பற்றி சொல்வாரு என பிரியங்கா அப்போது எதிர்பார்த்து இருக்க மாட்டார். இருவருக்கும் இப்படி ஒரு பிரச்சனை நடந்து கொண்டிருப்பது சேனல் கவனிக்காமல் விட்டதுதான் இது இவ்வளவு பிரச்சினையாக மாற காரணம்.
- மணிமேகலைக்கு ஆதரவாக போர் கொடியை தூக்கிய 5 பிரபலங்கள்
- CWC 5 ஃபைனலிஸ்ட் யார் தெரியுமா.?
- பிரியங்கா விஷயம் தெரிந்து ஆரம்பத்திலேயே தலையில் தட்டிய செஃப் தாமு