புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சிங்கப்பெண்ணில் அன்பு தான் அழகன் என்று மகேஷ் மூலமே தெரிந்து கொண்ட ஆனந்தி.. இனிதான் ஆட்டம் ஆரம்பம்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து ஸ்பெஷல் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த சீரியல் ரசிகர்கள் மாசக்கணக்காக எந்த ஒரு விஷயத்திற்காக காத்து கிடந்தார்களோ அது இன்று அல்லது நாளைய எபிசோடில் நடைபெற இருக்கிறது.

அன்பு நான்தான் அழகன் என்று எப்படியாவது சொல்லி விட வேண்டும் என சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்கள் தவமாய் தவம் கிடந்தார்கள். முத்துவுக்கு தெரிந்த பிறகு அவன் மூலம் இந்த விஷயம் வெளிவரும் என ஒரு சில எபிசோடுகளில் எதிர்பார்க்கப்பட்டது.

அன்பு தான் அழகன் என்று தெரிந்து கொண்ட ஆனந்தி

சமீபத்தில் ஆட்டோக்காரர் ஒருவர் அழகனை அடையாளம் காட்ட தயாராக இருந்தபோது நேயர்களுக்கு பெரிய நம்பிக்கையே வந்தது. அதைத்தொடர்ந்து மகேஷ் அன்பு தான் அழகன் என்று தெரிந்து கொண்ட பிறகு மொத்தமும் தலைகீழாய் மாறியது.

மகேசை திருமணம் செய்தால்தான் ஆனந்தியின் குடும்பம் நன்றாக இருக்கும் என அன்பு விலக முடிவெடுத்து விட்டான். அன்பு ஆனந்தியிடமிருந்து தன்னை பிரித்து விடப் போகிறான் என்ற பயத்தில் இவ்வளவு நாள் சீரியலில் இரண்டாவது ஹீரோவாக இருந்த மகேஷ் வில்லனாக மாறிவிட்டான்.

அன்பு பங்களாதேஷுக்கு கிளம்பிய நிலையில் அழகன் யார் என்று ஆனந்திக்கு எப்படி தெரியப் போகிறது என்ற பெரிய எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருந்து வந்தது. கடைசியில் மகேஷ் மூலமாகத்தான் ஆனந்திக்கு அன்பு தான் அழகன் என்று தெரியப் போகிறது.

அழகன் சம்பந்தப்பட்ட பொருட்கள் ஆனந்தி இடம் இருப்பது மகேஷுக்கு பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. ஆனந்தி வேலை செய்து கொண்டிருக்கும்போது கருணாகரனிடம் அந்தப் பொருட்களை எல்லாம் அழித்து விடும்படி சொல்கிறான்.

கருணாகரன் எல்லா பொருட்களையும் எரித்துக் கொண்டிருக்கும் போது ஆனந்தி அந்த இடத்திற்கு வருகிறாள். கதறி அழுது கொண்டே அந்த பொருளுடன் இருக்கும் செயினை எடுத்துப் பார்க்கிறாள். அதில் ஆனந்தியுடன் அன்புவின் புகைப்படமும் இருக்கிறது. ஆனந்தி அதைப் பார்த்து பயங்கரமாக கதறி அழுவது போல் அந்த ப்ரோமோ முடிந்து இருக்கிறது.

- Advertisement -

Trending News