புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சிங்கப்பெண்ணில் அன்புவின் முகமூடியை கிழிக்கும் ஆனந்தி.. பெரிய ஆப்புடன் காத்திருக்கும் மகேஷ்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோவுக்காக நேயர்கள் நேற்று இரவு முதல் தவமாய் தவம் கிடந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அன்பு தான் அழகன் என்று ஆனந்தி தெரிந்து கொள்வாளா, அல்லது கையில் கிடைத்த ஆதாரத்தையும் தவற விட்டு விடுவாளா என்பது எல்லோருடைய சந்தேகமாகவும் இருந்தது.

இதற்கு விடை தரும் விதமாக நேற்றைய எபிசோடில் ஆனந்திக்கு இன்னொரு ஆதாரம் கிடைத்தது போல் காட்டப்பட்டது. அன்புவை பார்த்த ஆட்டோக்கார அண்ணா ஆனந்தியை புரிந்து கொண்டு அவளுடைய காதலை ஏற்றுக் கொள்ளும்படி அன்பு விடம் சொன்னார்.

பெரிய ஆப்புடன் காத்திருக்கும் மகேஷ்

ஆனால் அன்பு அவரிடமே ரொம்ப கோபமாக பேசி விட்டான். கடைசியில் என்ன செய்வது என்று தெரியாமல் அன்புவை ஒரு போட்டோ எடுத்து ஆனந்திக்கு அனுப்பி வைத்து விடுகிறார். மேலும் இது குறித்து சொல்வதற்கு ஆனந்திக்கு தொடர்ந்து போன் பண்ணுகிறார்.

ஆனால் ஆனந்தியால் அந்த போனை எடுக்க முடியாமல் கருணாகரன் தடுக்கிறான். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆட்டோவில் ஏரியா அன்பு கடைசியாக மகேஷுக்கு போன் பண்ணுகிறான். மகேஷ் ரொம்பவும் கோபமாக ஆல் த பெஸ்ட் அன்பு என்று சொல்லி போனை கட் பண்ணி விடுகிறான்.

மித்ராவின் பேச்சை கேட்டு கருணாகரன் அழகன் சம்பந்தப்பட்ட எல்லா பொருட்களையும் மொட்டை மாடிக்கு கொண்டு வந்து எரிக்க முயலுகிறான். அந்த நேரத்தில் அங்கு வந்த ஆனந்தி அதை தடுக்கிறாள். அந்த ஆதாரத்துடன் இருக்கும் செயினையும் எடுத்து பார்க்கிறாள்.

இது அழகன் நமக்கு கொடுத்த செயின் தானே இதில் என்ன இப்போது இன்னொரு போட்டோ ஒட்டப்பட்டு இருக்கிறது என்று திருப்பி பார்க்கிறாள். அதில் அன்புவின் புகைப்படத்தை பார்த்து அவளுக்கு அழுகை மற்றும் சந்தோஷம் இரண்டும் சேர்ந்து வருகிறது.

போட்டோவை கூட அன்பு ஆசைப்பட்டு ஒட்டி இருக்கலாம் என கதையை மாற்ற வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஆட்டோக்காரர் அன்பு போட்டோ எடுத்து அனுப்பி இருப்பதால் கண்டிப்பாக இதுதான் ஆனந்தி அன்பு தான் அழகன் என உணரும் தருணம்.

எப்படியும் அன்பு வெளிநாட்டிற்கு போய்விடுவான் என மனக்கோட்டை கத்திக் கொண்டிருந்த மகேஷுக்கு இந்த விஷயம் பெரிய ஏமாற்றமாக இருக்கப் போகிறது. ஆனந்தியை சைக்கோ தனமாக காதலித்துக் கொண்டிருக்கும் மகேஷ் அடுத்து அன்புக்கு எப்படி பிரச்சனையை ஏற்படுத்தப் போகிறான் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Trending News