வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

அன்சிதாவின் கேரக்டருக்கு அடிபணிந்து போன ஆண்கள் அணி.. சுனிதா போன பிறகு சம்பவம் செய்யும் போட்டியாளர்

Bigg Boss Tamil 8 Anshita: பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் அணி கெத்தாகவும் ஒற்றுமையாகவும் இத்தனை நாள் இருந்து வந்தார்கள். ஆனால் அதையெல்லாம் ஒரு நிமிடத்திலேயே தவிடு பொடியாக்கும் விதமாக அன்சிதா தரமான சம்பவத்தை செய்து விட்டார். அதாவது இந்த வாரம் பெண்கள் அணியில் இருந்து ஆண்கள் அணிக்கு செல்லும் போட்டியாளராக அன்சிதா போயிருந்தார்.

வழக்கம் போல் ஆண்கள் அணி ஒன்றாக இருந்து சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் அதற்கு முன் சாப்பாடு ரெடியா என்று அன்சிதா கேட்கும் போது இன்னும் நேரமாகும் என்று சொல்லியிருந்தார்கள். அதனால் அன்சிதா வெளிய வந்து பெண்கள் அணியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

ஆனால் கொஞ்ச நேரத்திலேயே ஆண்கள் அணியில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் சாப்பிட துவங்கி விட்டார்கள். அப்பொழுது அன்சிதாவை பார்த்து நீங்க சாப்பிட போகலையா என்று கேட்கும் பொழுது அன்சிதா பிக் பாஸ் வீட்டுக்குள் போய் பார்க்கிறார். அங்கே அனைவரும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.

அன்சிதா ஆண்கள் அணிக்கு வந்திருக்கிறார் என்பது கூட ஞாபகம் இல்லாமல் அனைத்து போட்டியாளர்களும் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். இதனால் அன்சிதாவுக்கு தேவையான உணவை எடுத்து வைக்க மறந்து விட்டார்கள். உடனே அன்சிதா உள்ளே வருவதை பார்த்த தீபக் அவங்களுக்கு சாப்பாடு எடுத்து வச்சாச்சா என்று கேட்கிறார்.

அப்பொழுதுதான் முத்துக்குமாருக்கு ஞாபகம் வருகிறது ஐயோ மறந்துட்டோம் என்று, உடனே சாப்பிட்டுக் கொண்டிருந்த முத்துக்குமார் அவர் தட்டில் இருக்கும் பொரியலை ஒரு கிண்ணத்தில் சாப்பிட்ட கையோட எடுத்து வைத்து விட்டார். அதன் பிறகு அதை அன்சிதாவிடம் முத்துக்குமார் வந்து கொடுக்கிறார்.

ஆனால் அன்சிதாவிற்கு முத்துக்குமார் செய்த விஷயங்கள் எல்லாம் தெரிந்து போய் விட்டது. உடனே இது உங்க தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை எடுத்து வைத்திருக்கிறீர்களா என்று கேட்கிறார். அதற்கு முத்துக்குமார் சமாளித்து பார்க்கிறார். உடனே முத்துக்குமாருடன் சேர்ந்து மத்த போட்டியாளர்களும் சமாளிக்க முயற்சி எடுக்கிறார்கள்.

ஆனால் அன்சிதா மறந்துட்டேன்னு சொல்லி சாப்பிட்டு இருந்தால் கூட எனக்கு இவ்வளவு கோபம் வந்திருக்காது. ஆனால் அதை விட்டுவிட்டு உங்கள் தட்டில் இருந்து எடுத்துட்டு வந்து கொடுத்தது எனக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்துகிறது என்று சொன்னதும் ஆண்கள் அணியில் இருப்பவர்களுக்கு பண்ணின தவறு தெரிந்து விட்டது.

உடனே கொஞ்சம் கூட யோசிக்காமல் நாங்கள் பண்ணியது தவறுதான் என்று அன்சிதாவிடம் மொத்த ஆண்கள் அணியும் மன்னிப்பு கேட்டு மன்றாட ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு அன்சிதா பரவாயில்லை இன்று எனக்கு சாப்பாடு வேண்டாம். இன்று நான் சாப்பிடாமல் இருந்தால் தான் நாளைக்கு என்னை மறக்காமல் சாப்பாடு எடுத்து வைப்பீர்கள் என்று ஒரு அழகான விஷயத்தை பக்குவமாக எடுத்துச் சொன்னார்.

ஆனாலும் ஆண்கள் அணிக்கு மிகப்பெரிய குற்ற உணர்ச்சி இருந்ததால் அன்சிதாவை சமாதானப்படுத்தி சாப்பிட கூட்டிட்டு வந்து விட்டார்கள். அதன் பிறகு முத்துக்குமார் சாப்பிட்ட ஒரே தட்டில் இருவரும் சாப்பிட்டு சமரசம் ஆகி விட்டார்கள். அதன் பிறகு ஆண்கள் அணியில் தூங்கும் போகும் அன்சிதா எனக்கு இந்த கடைசி பெட்டு தான் வேணும் என்று கேட்டார்.

அத்துடன் இந்த பெட்டில் என்னுடன் நீங்கள் யார் வேண்டுமானாலும் தூங்கலாம் எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. எனக்கும் ஒரு அண்ணன் இருக்கிறார், அந்த அண்ணனுடன் பாசம் எவ்வளவு தூய்மையானது என்று எனக்குத் தெரியும். அதை நம்பிக்கை உங்களிடமும் எனக்கு இருக்கிறது. அதனால் எந்த வித தயக்கமும் இல்லாமல் என்னுடன் இந்த பெட்டை ஷேர் பண்ணிக்கலாம் என்று சொல்லி ஆண்கள் அணியின் நம்பிக்கையை அதிக அளவில் சம்பாதித்து விட்டார்.

சுனிதா உடன் இவ்ளோ நாள் ஒட்டிக்கொண்டு இருக்கும் பொழுது அன்சிதா பற்றி பெரிய ஐடியா எதுவும் இல்லை. ஆனால் இப்பொழுது சுனிதா இல்லை என்றதும் அன்சிதாவின் நல்ல விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பிக்கிறது. இப்படியே போனால் வெளியே எடுத்திருக்கும் கெட்ட பெயர் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

Trending News