Connect with us
Cinemapettai

Cinemapettai

simbu-venthu thaninthathu kadu

Videos | வீடியோக்கள்

இளசுகளை சொக்க வைத்த மெலோடி.. நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் சிம்புவின் மல்லி பூ சாங்

சிம்புவின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி இருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வசூல் லாபம் பெற்று வருகிறது. படத்தில் சிம்புவின் நடிப்பு எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்துள்ளதோ அதே அளவுக்கு பாடல்களும் மரண ஹிட் அடித்துள்ளது.

அதிலும் முக்கியமாக அந்த படத்தில் இடம்பெற்றுள்ள மல்லிப்பூ சாங் தற்போது இளசுகளை ஆட்டம் போட வைத்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் மது ஸ்ரீயின் குரலில் வெளிவந்துள்ள அந்த பாடல் ஆடியன்ஸை சொக்க வைக்கும் விதமாக இருக்கிறது. பாடலை கேட்கும் போதே அவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.

Also read : வசூலை அள்ளிய வெந்து தணிந்தது காடு.. கமல் பாணியில் பரிசு கொடுத்த ஐசரி கணேஷின் புகைப்படம்

வெளியூரில் தங்கி இருக்கும் கணவனை நினைத்து மனைவி ஏக்கத்துடன் பாடும் வகையில் அந்த பாடல் வரிகள் இருக்கும். இதுதான் இந்த பாடலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதை தொடர்ந்து மது ஸ்ரீயின் இனிமையான குரலும், பாடல் எடுக்கப்பட்ட விதமும் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது எங்கு திரும்பினாலும் இந்த பாடலை தான் கேட்க முடிகிறது. அது மட்டுமல்லாமல் பல இளசுகளின் மொபைல் காலர் டியூன் ஆகவும் இந்த பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்படி பலரின் பாராட்டுகளையும் பெற்ற இந்த பாடலின் முழு வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது.

Also read : வசூலில் பட்டையை கிளப்பும் வெந்து தணிந்தது காடு.. 4வது நாள் முடிவில் இத்தனை கோடியா?

இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே ஏகப்பட்ட வியூஸ் மற்றும் லைக்குகள் குவிந்து கொண்டிருக்கிறது. மேலும் அதிக பார்வையாளர்களை கடந்த இந்த பாடல் தற்போது சோசியல் மீடியாவில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இந்த பாடலை தான் தற்போது ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பாடல் வெளியீட்டு விழாவில் சிம்பு இந்தப் பாடலை பற்றி மிகவும் பெருமையாகவும், ரசிகர்களை இந்த பாடல் நிச்சயம் கவரும் என்று குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியது போன்று இந்த பாடல் தற்போது இளைஞர்களின் தேசிய கீதமாக மாறி உள்ளது.

Also read : முத்து வீரன் டானாக உருமாறிய வெந்து தணிந்தது காடு.. மிரட்டி விட்ட சிம்பு, ரஹ்மான்

Continue Reading
To Top