fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

உலகளவில் ட்ரெண்டிங்கில் உள்ள மேட்ரிக்ஸ் 4 தமிழி ட்ரைலர்.. மிரட்டலான சண்டை காட்சிகள்

Videos | வீடியோக்கள்

உலகளவில் ட்ரெண்டிங்கில் உள்ள மேட்ரிக்ஸ் 4 தமிழி ட்ரைலர்.. மிரட்டலான சண்டை காட்சிகள்

தி மேட்ரிக்ஸ் வேற லெவல் சயன்ஸ் பிக்ஷன் படம்.  90ஸ் கிட்ஸ்களுக்கு கிடைத்த எவ்வளவோ விஷயங்களில் இதுவும் ஒன்று என்று கூட சொல்லலாம். லேரி மற்றும் ஆன்டி வச்சோவ்ஸ்கி எழுதி இயக்கிய படம். நியோ ரோலில் கேனு ரீவ்ஸ், ட்ரினிட்டி ரோலில் கேர்ரி அன்னே மாஸ் முக்கிய ரோலில் நடித்திருப்பர். 1999 தொடங்கி 2003 ஆம் ஆண்டுவரை மூன்று பாகங்கள் வெளியாகின. மூன்றுமே சூப்பர் ஹிட் தான்.

இப்படத்தின் நான்காவது பார்ட்டை “The Matrix Resurrections ” லேரி இயக்கியுள்ளார். படம் டிசம்பர் 22 , 2021 கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உலகெங்கும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நியோ மருத்துவருடன் தெரபி செக்ஷனில் உள்ளது போன்று தொடங்குகிறது. பழைய விஷயங்கள் கனவு போல தோன்றுகிறது. ட்ரினிட்டியை சந்திக்கிறார், பயிற்சி எடுப்பது போன்று அடுத்தடுத்த காட்சிகள் விரிகிறது. மீண்டும் தொடக்கத்திற்கு வந்துவிட்டோம் என்ற வசனமும் வருகிறது.

இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, யாஹ்யா அப்துல் மதீன் 2 (மார்பியஸ் ரோல்), ஜடா பின்கட் ஸ்மித், லேம்பெர்ட் வில்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன், சேசிங் காட்சிகள் , டெக்னலாஜி சமாச்சாரம், தனி மனித தேடல் என வேற லெவெலில் படம் இருக்கப்போவது மட்டும் உறுதி.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top