இளம் பெண்ணுக்கு அந்தரங்க தொல்லை கொடுத்த மாஸ்டர்.. மேலிடம் எடுத்த நடவடிக்கை

Gossip: இப்போது அட்ஜெஸ்ட்மென்ட் புகார்கள் ஒவ்வொன்றாக கிளம்ப ஆரம்பித்து விட்டது. இதனால் பிரபல நடிகர்கள் கூட எப்போது மாட்டுவோம் என்ற பீதியில் இருக்கின்றனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் டான்ஸ் மாஸ்டர் ஒருவர் இதில் சிக்கி இருக்கிறார்.

ஏற்கனவே இப்படி ஒரு விஷயத்தில் அவர் மாட்டியது மட்டுமல்லாமல் சிறை வரை கூட சென்றார். ஆனாலும் அவர் திருந்தவில்லை என்பது தற்போது நடந்துள்ள நிகழ்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

அதாவது இளம் பெண் ஒருவரை இவர் விடாமல் உடல் ரீதியாக டார்ச்சர் செய்திருக்கிறார். தன் தேவைக்கு அவரை பயன்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் மூர்க்கத்தனமாக தாக்கியதாகவும் புகார் எழுந்துள்ளது.

இளம் பெண்ணை டார்ச்சர் செய்த மாஸ்டர்

மேலும் நடன இயக்குனர் செய்த பல கொடுமைகளையும் இளம்பெண் புட்டு புட்டு வைத்துள்ளார். இந்த விவகாரம் அக்கட தேசத்தில் சூடு பிடித்துள்ள நிலையில் மாஸ்டர் மீது மேலிடமும் சில கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதாவது இவர் அரசியல் கட்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட கட்சி இனிமேல் அவர் தொடர்பு இருக்கக்கூடாது என சத்தம் இல்லாமல் அதிரடி உத்தரவு போட்டிருக்கிறதாம்.

எப்படியும் கட்சியை வைத்து இந்த விஷயத்தில் இருந்து தப்பித்து விடலாம் என நினைத்த மாஸ்டர் தற்போது வசமாக சிக்கி விட்டதாக கிசுகிசுத்து வருகின்றனர். அந்த அளவுக்கு அவருக்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதால் இந்த பிரச்சனை இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அடுத்தடுத்து குவியும் அட்ஜஸ்ட்மென்ட் புகார்கள்

- Advertisement -spot_img

Trending News