ரோபோ சங்கருக்கு மறுவாழ்வு கொடுத்த முக்கிய பிரபலம்.. மொத்த குடும்பத்துக்கும் குலசாமியாக மாறிய முறுக்கு மீசை

The main celebrity who rehabilitated Robo Shankar: எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்பதற்கு ஏற்ப 90 கிலோவில் இருந்த ரோபோ சங்கர் தற்போது 40 கிலோவிற்கு மாறி கம்பேக் கொடுத்து வருகிறார். தற்போது சினிமாவில் நிரந்தர காமெடி என்று சொல்வதற்கு யாரும் இல்லை. ஒரு சிலர், காமெடி நடிகராக வந்தாலும் அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக கதையே தேர்வு செய்து அதில் கவனம் செலுத்தி விடுகிறார்கள்.

இந்த சூழலில் ரோபோ சங்கரின் காமெடியும் நகைச்சுவையான பேச்சும் அனைவரையும் கவர்ந்தது. ஆனால் அதற்குள் இவருடைய உடம்பில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்ததால் கடந்த ஆண்டு பல கஷ்டங்களை சந்தித்திருக்கிறார். அதாவது ஆறு மாதத்திற்கு முன்னதாக ரோபோ சங்கரின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. இவருக்கு என்னதான் ஆச்சு என்று பல கேள்விகள் எழும்பி வந்தது.

ஏனென்றால் பாடி பில்டர் மாதிரி உடம்பை வைத்திருந்தவர் எலும்பும் தோலுமாக மாறியதற்கான காரணம் என்னவென்று கேள்விகள் வர ஆரம்பித்தது. அதற்கான காரணம் மஞ்சள் காமாலை மற்றும் சுகர் அதிகமானதால் அவருடைய உடல்நிலை ரொம்பவே பாதிப்படைந்து இருக்கிறது. அதனால் தான் அவர் சிகிச்சையில் இருந்த பொழுது அவருடைய உடம்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

Also read: தட்டு தடுமாறி உயிர் பிழைத்த ரோபோ சங்கர்.. ரஜினி, கமலுடன் கொண்டாடிய 22-வது திருமண புகைப்படம்

இந்த சூழ்நிலையில் ரோபோ சங்கரை பார்த்த எல்லோரும் வாய்க்கு வந்தபடி இனி அவ்வளவுதான், ரொம்பவே மோசமாக இருக்கிறார் என்று பல கடுமையான விமர்சனங்களை கொடுத்து வந்தார்கள். இதனால் விரக்தியில் இருந்த இவருடைய மனைவிக்கு தக்க சமயத்தில் ஆறுதலாக இருந்து, ரோபோ சங்கருக்கு மறுவாழ்வு கொடுத்தது நக்கீரன் கோபால்.

இவர்தான் ரோபோ சங்கரின் மனைவிக்கு போன் பண்ணி இதற்கான மருத்துவம் அனைத்தும் சித்தா மருத்துவமனையில் கிடைக்கும் என்று அந்த ஆஸ்பத்திரிக்கு போக சொல்லி வலியுறுத்தி இருக்கிறார். ஆரம்பத்தில் இந்த மருந்து செட் ஆகுமா, இதை எடுத்துக்கலாமா என்ற சந்தேகத்தில் ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவி குழப்பத்தில் இருந்திருக்கிறார்கள்.

ஆனால் தொடர்ந்து நக்கீரன் கொடுத்த நம்பிக்கையால் ஒரு முயற்சி எடுத்துப் பார்க்கலாம் என்று அந்த மருத்துவமனையில் சேர்த்து அதற்கான ட்ரீட்மெண்டை பார்த்து வந்திருக்கிறார். அதன்படி சரியா 30 நாட்களுக்குள் ரோபோ சங்கர் பழைய மாதிரி கம்பேக் கொடுத்து வந்திருக்கிறார். தற்போது இது எல்லாத்துக்கும் காரணம் நக்கீரன் கோபால்தான் என்று மொத்த குடும்பமும் இவருக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்து அவரை குலசாமியாக பார்த்து வருகிறார்கள்.

Also read: அமெரிக்காவில் இருந்து வந்த திடீர் அழைப்பு.. அதிர்ச்சியில் உறைந்த ரோபோ சங்கர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்