Connect with us
Cinemapettai

Cinemapettai

azeem-kamal-bigboss

Videos | வீடியோக்கள்

உச்சகட்ட கோபத்தில் ரோஸ்ட் போட்ட ஆண்டவர்.. தன்மானம், சுயமரியாதை இருக்கிறவன் மற்றவரை அவமதிக்கக் கூடாது

தன்மானம், சுயமரியாதை உள்ளவர்கள் மற்றவர்களை அவமரியாதை செய்வதற்கு முன் சற்றேனும் யோசிப்பார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஆரம்பத்தில் அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி எக்கச்சக்கமாக உயர்ந்தது. ஆனால் போகப் போக போட்டியாளர்களின் அத்துமீறல்களும், நாவடக்கம் இல்லாத பேச்சும் நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு வெறுப்பை தான் கொடுத்தது. அதிலும் சதா நேரமும் கூச்சலும் சண்டையுமாக இருக்கும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை பார்ப்பதற்கு கூட ரசிகர்கள் விரும்பவில்லை.

அந்த அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் ஆரம்பத்தில் இருந்தே அசீமின் பேச்சும் நடவடிக்கையும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இதை கமல் கூட பலமுறை அன்பாகவும், அதட்டியும், கண்டிப்பாகவும் கூறிவிட்டார். ஆனாலும் அவர் தன் போக்கை மாற்றிக் கொள்வதாக இல்லை.

Also read: ஜனனியை தொடர்ந்து பிக் பாஸில் வெளியேறப் போகும் போட்டியாளர்.. நூலிலையில் தப்பிய ரக்ஷிதா

அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே ஓவராக ஆட்டம் போடும் அசீம் நேற்றைய நிகழ்ச்சியில் படுமோசமாக நடந்து கொண்டார். அந்த வகையில் இதை ஆண்டவர் நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும் என்ற குரல்களும் ஒலித்தது. மேலும் இன்றைய நிகழ்ச்சியை காணவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

கடைசியில் பலரும் எதிர்பார்த்தது போலவே தற்போது அட்டகாசமான ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆண்டவர் இந்த ரேங்கிங் டாஸ்க் என்பது துண்டு போட்டு சீட்டு பிடிப்பதை போல் கிடையாது. அது திறமை சம்பந்தப்பட்டது. அதை போட்டியாளர்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. பிடிப்பார் அற்ற மன்னர்கள் இருந்தது போல், எதிர்பாரற்ற முரடர்களும் இருக்கிறார்கள்.

Also read: பிக் பாஸ் வீட்டில் அதிர்ச்சி.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போட்டியாளர்

தன்மானம், சுயமரியாதை உள்ளவர்கள் மற்றவர்களை அவமரியாதை செய்வதற்கு முன் சற்றேனும் யோசிப்பார்கள். அதே அவமரியாதை நமக்கு வந்துவிட்டால் என்ன செய்வது, ஆனால் இவர் யோசித்ததாக தெரியவில்லை இவருடன் பேசித்தான் ஆக வேண்டும் என்ற பீடிகையோடு இந்த ப்ரோமோ முடிந்துள்ளது.

இதை பார்க்கும் போதே ஆண்டவர் யாரைப் பற்றி பேசுகிறார் என்று அனைவருக்கும் தெரிந்து விட்டது. மேலும் சூடு சொரணை உள்ளவர்கள் ஒரு முறை சொன்னால் கேட்டுக் கொள்வார்கள் என்பது போல் இருந்தது ஆண்டவரின் பேச்சு. அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சியில் அசீம் நிச்சயம் ஆண்டவரிடம் சிக்கி சின்னாபின்னமாக போவது உறுதி. இதற்குப் பிறகாவது அவர் கொஞ்சம் நாவடக்கத்தோடு நடந்து கொண்டால் நல்லது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Continue Reading
To Top