பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் இறப்பு என்ற ஒன்று நிச்சயம் உள்ளது. அந்த இறப்பு ஒருவருக்கு எந்நேரத்தில் வேண்டுமானாலும் நேரலாம்.

ஒருவருக்கு தான் எப்போது இறக்கப் போகிறோம் என்ற உண்மை தெரிந்துவிட்டால், அவர் வாழும் ஒவ்வொரு நாளும் நரகமாகிவிடும்.

ஆனால் இங்கு ஒரு பிரபலத்தின் இறப்பு நமக்கு அதிக விடயங்களை கற்றுத்தந்துள்ளது.

ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்த வினுசக்கரவர்த்தியின் இறுதிச்சடங்கில் திரையுலகினர் 100 பேர் கூட கலந்துகொள்ளாத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு காரணம் என்ன? என்று சற்று சிந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தால் உங்கள் இறப்பின் பின்னால் நடப்பதையும் புரிந்துக்கொள்ள முடியும்.

அவரோடு நடித்தவர்கள் வந்தாலே ஆயிரம் பேர் திரண்டு இருக்காலாம்.? ஆனால் ஏன் இது நடக்க வில்லை.

நடிகர் வினுசக்கரவர்த்தி 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற கலைஞர்.

இயக்குநர், எழுத்தாளர், முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர் என பல்வேறு பெருமைகளைப் பெற்ற வினுசக்கரவர்த்தி உடல் நலக்குறைவால் காலமானார்.

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற வினுசக்கரவர்த்தியின் இறுதிச்சடங்கில் திரையுலகினர் குறைவான அளவிலேயே கலந்துகொண்டது சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்த நடிகர் அநாதையான சோகம்..!? இறப்பில் கற்றுத்தந்த பாடம்..

மூன்று விடயங்கள் நிச்சயம் சிந்திக்கப்பட வேண்டியது…

01- பணம் – பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது.

02-உறவு – உரிமை இல்லாத உறவும், உண்மை இல்லாத அன்பும், நேர்மை இல்லாத நட்பும், நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும் என்றும் நிரந்தரமில்லை.

03-அந்தஸ்த்து – இதுவும் எமக்கு நிரந்தரமாக இருப்பதில்லை.

இவை மூன்றும் இறக்கும் போது இறுதியில் எம்மை விட்டு பிரிந்து செல்லுகின்றது. அது போலதான் இவர் வாழ்விலும் நடந்துள்ளது.

இறுதி தருணங்களில் கண்ணீர் மட்டும்தான் எமக்கு சொந்தம். அதுவும் அருகில் உள்ளவர்களின் கண்களின் வழியில்தான் தெரியும்.

வாழ்க்கை கண் மூடி விழிப்பதற்கு முன்னர் வயதுகள் கடந்து முதுமையை தொட்டு நிற்கிறோம். ஒரு நொடிப்பொழுது கடந்து செல்கிறது எனில் பல அனுபவங்களை, சம்பவங்களை நாம் கடந்திருக்கின்றோம் என்று அர்த்தம். அதில் இறப்பு, பிறப்பு, இன்பம், துன்பம், அழுகை, கண்ணீர் எல்லாமே கற்றுக்கொள்கின்றோம்.. நடிகர் வினுசக்கரவர்த்தியின் இறப்பும் உங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கும் என்பது உண்மையே..