எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த் என பலர் நடித்த படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் நா.காமராசன். 75 வயதான பழம்பெரும் பாடலாசிரியரான இவர் உடல்நலமின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

மறைந்த நா.காமராசன் அவர்களுக்கு லோகமணி என்ற மனைவியும், தைப்பாவை என்ற மகளும், திலீபன் என்ற மகனும் உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான தேனியில் இன்று மாலை நடைபெறும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இவர் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்பு துறையில் அதிகாரியாகவும் சில ஆண்டுகள் பணியாற்றியவர்.