2,500 தியேட்டர்களில் வெளியான ‘தி லெஜண்ட்’ அண்ணாச்சி ஜெயித்தாரா.? அனலை கக்கும் ட்விட்டர் விமர்சனம்

மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் தி லெஜண்ட் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. இப்படம் கிட்டத்தட்ட 2500 தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

முதல் படத்திலேயே முன்னணி ஹீரோவுக்கு இணையாக காலை 4 மணிக்கே முதல் காட்சி ஒளிபரப்பானது பலரையும் வியக்க வைத்துள்ளது. இருப்பினும் அண்ணாச்சி அப்படி என்னதான் இந்த படத்தில் செய்திருக்கிறார் என்பதை காண்பதற்காகவே கூட்டம் அதிகாலையிலேயே தியேட்டரில் மொய்க்க ஆரம்பித்துவிட்டது.

the legend
the legend

அந்த வகையில் தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அதில் ரசிகர்கள் படம் மிகவும் சுமாராக இருப்பதாகவும், சொல்லிக் கொள்ளும் படியான காட்சிகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஹாரிஸ் ஜெயராஜின் இசை வழக்கம் போல நன்றாக இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

the legend
the legend

படத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகள் மற்றும் டெக்னாலஜி அனைத்தும் சிறப்பாக இருந்தாலும் அண்ணாச்சியின் நடிப்பு ரொம்பவும் சுமாராக தான் இருக்கிறது. அதனால் படத்தை கலாய்ப்பதற்காக வேண்டுமானால் தியேட்டருக்கு செல்லலாம் என்று ரசிகர்கள் கிண்டலடித்துள்ளனர்.

the legend
the legend

மேலும் சில ரசிகர்கள் படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் கூட சிரிப்பை வரவழைப்பதாகவும், இது ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் படமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை சிரிச்சு சிரிச்சு வயிறே வலித்து விட்டதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் ஹாரிஸ் ஜெயராஜின் இசை மற்றும் பின்னணி இசை, ஏகப்பட்ட பணத்தை கொட்டி காட்டப்பட்டிருக்கும் பிரம்மாண்டம் இந்த காரணங்களுக்காக படத்தை பாராட்டலாம் என்று கூறியிருக்கும் ரசிகர்கள் படம் சுமாருக்கு சுமாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்