முதல் படத்திலேயே அமர்க்களப்படுத்தும் அண்ணாச்சி.. விட்டா அஜித், விஜய்க்கே டப் கொடுப்பாரு போல

சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் அருள் தற்போது தி லெஜன்ட் என்ற திரைப்படத்தை தயாரித்து, ஹீரோவாகவும் அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கியுள்ளார். இதில் அண்ணாச்சி உடன் இணைந்து ஊர்வசி ரவ்டேலா, பிரபு, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ், பஞ்ச் டயலாக் போன்ற அனைத்தும் கலந்த கலவையாக இருந்த அந்த ட்ரெய்லர் தற்போது சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது. அதிலும் இந்தப் படத்திற்காக அண்ணாச்சி ஆக்சன் மற்றும் நடனம் என்று அனைத்திலும் தனது கடின உழைப்பை கொடுத்துள்ளார்.

இவர் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்றதுமே நெட்டிசன்கள் இவரை மீம்ஸ் போட்டு கலாய்த்து வந்தனர். ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் இந்த ட்ரைலரை பார்த்த பலரும் இவருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

பான் இந்திய திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. அந்த வகையில் இப்படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என்று ஒவ்வொரு மொழியிலும் வெளியாகி உள்ளது.

தற்போது பான் இந்திய திரைப்படங்கள் வெளிவருவது அதிகமாக இருந்தாலும் முதல் படத்திலேயே இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு திரைப்படத்தை அண்ணாச்சி தயாரித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் இவர் தற்போது ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களையே வியக்க வைக்கும் அளவுக்கு இப்படத்தை பிரமோஷன் செய்ய இருக்கிறார். அதனால் இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பும் திரையுலகில் அதிகமாக இருக்கிறது.

Next Story

- Advertisement -