விஜய்க்கு போட்டியாக வெளிவரும் படங்கள் ஹிட்டாகுமா? ஆகாதா? என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் சுமார் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் டபுள் தீபாவளி கொண்டாட தயாராகி உள்ளனர்.

vijay mersal

இந்த நிலையில் இந்த படம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் திரையிடவுள்ளதாகவும், கபாலி, பாகுபலி 2 படத்திற்கு பின்னர் திரையிடப்படும் தென்னிந்திய திரைப்படம் ‘மெர்சல்’ என்பதும் ஏற்கனவே நாம் பார்த்ததே.

இந்த நிலையில் ‘மெர்சல்’ திரைப்படத்தின் டிக்கெட் மிக வேகமாக இந்த திரையரங்கில் புக் ஆகியதை தொடர்ந்து தற்போது இந்த படம் பெரிய ஸ்க்ரீனுக்கு மாற்றப்பட்டது.

Thalapathy Vijay with Gogo Requiem

இதுகுறித்து கிராண்ட்பிரிக்ஸ் திரையரங்கின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘மெர்சல் படத்திற்கு அதிக டிக்கெட்டுக்கள் புக் ஆகியுள்ளதை தொடர்ந்து பெரிய திரைக்கு மாற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 17ஆம் தேதி பாரீஸ் நேரப்படி இரவு 11.55க்கு ‘மெர்சல் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

kodiveeran

இந்நிலையில், மெர்சல் தீபாவளிக்கு வருவதை அடுத்து மற்ற படங்கள் விலகி கொண்டன. இதையடுத்து ஒரு சில படங்கள், மட்டும் தீபாவளிக்கு மெர்சலுடன் மோத உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள கொடிவீரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில். தற்போது, நடிகர் வைபவ், ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கும் மேயாத மான் திரைப்படமும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.