fbpx
Connect with us

Cinemapettai

இந்த ஒரு பெண்ணால் தான் உலகம் முழுக்க கொரானா பரவியது.. அதிர்ச்சி தகவல்

India | இந்தியா

இந்த ஒரு பெண்ணால் தான் உலகம் முழுக்க கொரானா பரவியது.. அதிர்ச்சி தகவல்

சீனாவிலிருந்து கொரானா வைரஸ் பரவி உலகம் முழுவதும் பல உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உலக மக்களிடையே பெரும் அச்சத்தை கிளப்பியுள்ளது. இதற்கெல்லாம் ஒரு பெண் தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா?

சீனாவிலுள்ள வுஹான் நகரத்தில் உள்ள 57 வயது மதிக்கத்தக்க வெய் குவாஜியான் என்ற பெண்மணி அங்குள்ள மாமிச சந்தையில் இறால் விற்பனை செய்து வருகிறார். இவருக்கு டிசம்பர் 10 ஆம் தேதி உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது.

வயதான பெண்மணி என்பதால் அடிக்கடி குளிர் காலத்திற்கு ஏற்ப காய்ச்சல், தலைவலி வந்து செல்லும் என நினைத்து மருத்துவரிடம் சாதாரண காய்ச்சலுக்கு மருந்துகள் பெற்றுச் சென்றுள்ளார்.

மருத்துவர்களும் முதலில் சாதாரண காய்ச்சல் தான் என நினைத்து மருந்துகள் கொடுத்து வந்த நிலையில், அதேமாதிரி அறிகுறிகள் கொண்ட நோயாளிகள் பலர் தொடர்ந்து மருத்துவமனையில் வந்த வண்ணம் இருந்துள்ளனர்.

மீண்டும் டிசம்பர் 16ஆம் தேதி வெய் இதுவரை வந்த காய்ச்சல்கள் இது போல் இல்லை எனவும், இவ்வளவு சோர்வை ஏற்படுத்தியதில்லை எனவும் சந்தேகம் அடைந்து மீண்டும் அதே வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட வெய் ஜனவரி முதல் வாரத்தில் பூரண குணமடைந்தார். அதன் பிறகுதான் அது கொரானா வைரஸ் என்றும், தான் விற்ற இறால் மூலமாகவும், அங்கு பயன்படுத்திய கழிவறைகள் மூலமாகவும் அங்குள்ள மக்களுக்கு பரவ அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை அரசிடம் முறையிட, அவர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர். பின்னர் கொஞ்ச நாட்களிலேயே கிட்டத்தட்ட அந்த நகரத்தில் 27 பேருக்கு கொரானா வந்துள்ளது. அதில் 24 பேர் வெய்யுடன் தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டது.

அப்போது இந்த நோயின் தீவிரத்தை சீன அரசு கவனத்தில் எடுத்திருந்தால் தற்போது உலகம் இவ்வளவு பெரிய பேரழிவை சந்தித்து இருக்காது எனவும் கருத்துக்கள் முன்வைக்கப் படுகிறது. டிசம்பர் 1ஆம் தேதி இந்த நோய்க்கான அறிகுறிகள் மறைந்து விட்டதாக அந்த வுஹான் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை வைத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே அரசு அலட்சியமாக இருந்துள்ளதாக தெரிகிறது.

தற்போது இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பலரை சித்திரவதை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top