கடும் எதிர்ப்பு, வெறுப்புணர்வை தூண்டிய தி கேரளா ஸ்டோரி.. படம் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

ட்ரெய்லரிலேயே மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பிய திரைப்படம் தான் தி கேரளா ஸ்டோரி. சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா ஷர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் நேற்று கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெளியானது.

படத்தின் ட்ரெய்லர் கடும் விமர்சனங்களையும், தொடர் கேள்விகளையும் எழுப்பி இருந்தாலும் முழு படத்தையும் பார்த்தால் தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்ற நடுநிலை கருத்தும் இருந்தது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் இப்படம் தியேட்டருக்கு வந்த அத்தனை நபர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Also read: நாடு முழுக்க அவ்வளவு எதிர்ப்பு.. பாக்ஸ் ஆபிஸை மிரட்டிவிட்ட ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் முதல் நாள் வசூல்

அது எதனால் என்பதை இங்கு ஒரு விமர்சனத்தின் மூலம் விரிவாக காண்போம். கதைப்படி நான்கு பெண்கள் ஒரு ஹாஸ்டலில் தங்கி இருக்கின்றனர். அதில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண் தன் தோழிகளை மூளை சலவை செய்து மதம் மாற்றுகிறார். இதனால் அந்த பெண்கள் சந்திக்கும் துயரங்கள் என்ன என்பதை தான் இப்படம் காட்டுகிறது.

இது உண்மை சம்பவத்துடன் கற்பனையும் கலந்து எடுக்கப்பட்ட படம் என்று சொல்லப்பட்டாலும் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இருக்கிறது என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. ஏனென்றால் படத்தில் இந்து பெண்கள் பணக்கார ஆண்களிடம் மயங்குவது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

Also read: பட்டதற்கு பின் புத்தி தெளிந்த மனோபாலா.. இனி இதை மாதிரி யாரும் செய்யாதீங்க என கடைசியா கொடுத்து அட்வைஸ்

அதேபோன்று இஸ்லாமிய மக்கள் தவறானவர்கள் என்பது போலவும் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பல கொடூரமான காட்சிகளும் பார்ப்பவர்களுக்கு ஒரு பதட்டத்தையே உருவாக்குகிறது. இவ்வாறு சர்ச்சைகளை முன் வைக்கும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இப்படத்திற்கு இப்போதும் கூட எதிர்ப்பலைகள் எழுந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில் கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு என்று கூறப்பட்டாலும் இது போன்ற கதை களம் வெறுப்பை மட்டுமே ஏற்படுத்துகிறது. அயோத்தி போன்று மதங்களை கடந்த மனிதாபிமான படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி மாதிரியான படங்களும் வந்து கொண்டிருப்பது சற்றே வேதனையானது.

Also read: நாலு வருட தவம், அட்லீயை உருட்டும் கெட்ட நேரம்.. தள்ளி போகும் ரிலீஸ் தேதி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்