ரத்தம் சிந்திய சரித்திரம்.. பல சர்ச்சையை கிளப்பிய ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் ஒரு அலசல்

விவேக் அக்னி கோத்ரி இயக்கத்தில் ஹிந்தியில் த காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. ஜீ ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி, தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் காஷ்மீரில் நடந்த சில சம்பவங்களையும், அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் பற்றியும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் காஷ்மீரை பற்றி தெரியாத பல விஷயங்கள் இப்படத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது

அதே போன்று முஸ்லிம்கள் பண்டிட்களுக்கு இடையே இருக்கும் நிலப் பிரச்சனை உள்ளிட்ட சில விஷயங்களில் முரண்பாடு இருப்பதாக படத்தை பார்க்க பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தின் சில காட்சிகள் ஒரு சார்பாக காட்டப்பட்டு இருப்பதாகவும் சோஷியல் மீடியாவில் விவாதங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

இருப்பினும் இப்படி ஒரு ஆவணத் திரைப்படத்தை துணிந்து எடுத்திருக்கும் இயக்குனரின் தைரியத்திற்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று இதில் காஷ்மீரில் அதிகம் பேசப்படாத பல சோகமான பக்கங்களையும் இயக்குனர் காட்டியிருக்கிறார் என்பதே பலரின் கருத்து.

நாம் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் பார்த்து இருந்த பிரபல ஹிந்தி நடிகர் அனுபம் கேர் இந்த படத்தின் மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். படம் ஒரு வியாபார நோக்கில் எடுக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு சிலர் கூறி வந்தாலும் இந்த படத்தை பற்றியும் இதில் பேசப்பட்டிருக்கும் விஷயங்களைப் பற்றியும் வருங்கால தலைமுறைகள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

kashmirfiles
kashmirfiles

காஷ்மீர் என்ற இடத்தின் அழகை நாம் பார்த்திருப்போம், கேட்டு இருப்போம் ஆனால் அந்த இடத்திற்கு பின்னால் இப்படி ஒரு ரத்தக்கரை படிந்த பல சரித்திரங்களும் இருக்கிறது என்பதை இந்த ஆவணத் திரைப்படம் மூலம் நம்மால் உணர முடிகிறது. அந்த வகையில் இப்படம் பல விமர்சனங்களை பெற்று இருந்தாலும் இந்திய சினிமாவில் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒரு படமாக இருக்கிறது.

thekashmirfiles
thekashmirfiles
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்