படுக்கையில் முத்தமழையில் கோபி அங்கிள்.. மகா சங்கமத்தில் நடக்கும் அட்டகாசம்

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்கள் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடர்கள் இணைந்து 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணி நேரம் மகாசங்கமமாக இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது. இதனால் பல சுவாரசியமான காட்சிகளுடன் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மொத்தமாக கோபியின் தந்தை ராமமூர்த்தியின் பிறந்தநாளுக்காக சென்னை வந்துள்ளனர். மூர்த்தியும் அவர்களது தம்பிகளும் ராமமூர்த்தியின் நிலைமையைப் பார்த்து வருந்துகின்றனர். அதன்பிறகு இரு குடும்பங்களும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியாக உள்ளனர்.

ஆனால் கோபி இந்த குடும்பத்தை பார்த்தவுடன் கொஞ்சம் எரிச்சல் அடைகிறார். ஆனால் அதையெல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளாமல் சிரித்தபடி எல்லோரிடமும் பேசுகிறார். இந்நிலையில் கோபியுடன் மூர்த்தி மற்றும் கண்ணன் இருவரும் ஒரே ரூமில் தங்குகிறார்கள்.

ஒரு பக்கம் மூர்த்தி உளுந்து மூட்டைமேல போய் பால் வச்சிருக்கீங்க வீணா போய்விடாதா என தூக்கத்தில் கத்துகிறார். மறுபக்கம் கண்ணன் தூக்கத்தில் ஐஸு என நினைத்துக்கொண்டு கோபியை கொஞ்சி முத்தம் கொடுக்கிறார். இவர்களுக்கு நடுவில் கோபி மாட்டிக்கொண்ட என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்.

மேலும்,கோபிக்கு ராதிகா போன் செய்கிறார். உடனே மூர்த்தி, யார் இந்த நேரத்துக்கு போன் செய்றாங்க என கேட்கிறார். என்னுடன் வேலை பார்ப்பவர் என கோபி சமாளிக்கிறார். என்னது நைட் போய் பண்றாரு முதல்ல அவருடைய சாவகாசத்தில் நிறுத்துங்கள் என மூர்த்தி கூறுகிறார்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாத கோபி, மொதல்ல இவங்கள ரூம விட்டு அனுப்பனும் என முடிவெடுக்கிறார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தால் கோபி, ராதிகாவை காதலிப்பது எல்லோருக்கும் தெரிய வர அதிக வாய்ப்பு உள்ளது.

Next Story

- Advertisement -