Secret told by the Apple-phone owner: சில விஷயங்கள் நம் வாழ்க்கைக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று தெரிந்த பின்னும் அதைப் புறக்கணித்து வருவோம். ஆனால் பட்டதுக்கு அப்புறம்தான் புத்தி வரும் என்று சொல்வார்கள். ஆனால் பட்ட பிறகு புத்தி வந்தா என்ன வரலைன்னா என்ன என்பதற்கு ஏற்ப வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும். அப்படித்தான் சாவின் விளிம்பிற்கு சென்ற Apple-phone ஓனர் அவஸ்தைபட்ட பின் சில விஷயங்களை புரிந்து கொண்டிருக்கிறார்.
அதாவது நம்முடைய சந்தோசம் முழுவதும் பணத்தில் தான் இருக்கிறது என்று அதன் பின்னாடியே நம் ஓடிக்கொண்டு நேரத்தை செலவழிக்கிறோம். ஒரு சைக்கிள் வாங்கியதும் இரு சக்கர வாகனத்திற்கு ஆசைப்படுகிறோம், இருசக்கர வாகனம் கிடைத்ததும் கார் வாங்க ஆசைப்படுகிறோம். கார் வந்ததும் பங்களா போன்ற வீடுகளில் சொகுசாக வாழ வேண்டும் என்று ஆசை பெருகி கொண்டு தான் போகுது.
பட்டத்துக்கு பின் புத்திக்கு எட்டிய விஷயங்கள்
ஆனால் இதற்கு அஸ்திவாரமான நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பற்றி நாம் மனதிற்குள் கொண்டு வருவதே இல்லை. இது நம் மனதுக்கும் மூளைக்கும் நன்றாகவே தெரியும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்று. அதேபோல ஆரோக்கியம் இருந்தால் தான் வாழ்நாளில் ஒவ்வொரு நொடியையும் சந்தோசமாக கழிக்க முடியும்.
அந்த வகையில் ஆப்பிள் ஓனர் ஸ்டீவ் ஜாப்ஸ், இவரிடம் பல மில்லியன் கணக்கில் பணம் புதைந்து கிடந்திருக்கிறது. ஆனால் கடைசியில்தான் உணர்ந்து இருக்கிறார் அந்த பணம் எதுவுமே என்னுடைய நோயை குணப்படுத்த முடியாது என்று. பணத்துக்கு பின்னாடி போன என்னால் ஆரோக்கியமான உடலை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்று கடைசி நிமிடத்தில் வருத்தம் அடைந்து இருக்கிறார்.
இவரைப் போல இந்தியாவை சேர்ந்த பங்குச்சந்தை முதலீட்டாளரான இராகேசு சுன்சுன்வாலா சிறுநீரகத் தொடர்பான பிரச்சனையால் நோய்வாய்ப்பட்டு கடுமையான உறுப்பு செயலிழப்பு இழந்து அவதிப்பட்டு மரணம் அடைந்திருக்கிறார். இறக்கும் தருணத்தில் அவர் கூறியது நான் செய்ததில் மிக மோசமானது என்னுடைய உடம்பை கவனிக்காமல் விட்டதுதான்.
அனைவருக்கும் கூறுவது என்னவென்றால் எல்லோரும் முதலில் கவனத்தில் கொள்வது ஆரோக்கியத்தை தான். தயவு செய்து அதை மனதில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் வாழுங்கள் என்று பட்டதுக்கு அப்புறம் புத்தியுடன் கூறி இருக்கிறார். எத்தனை கோடி கோடி பணம் இருந்தாலும் இவர்களுடைய ஆரோக்கியம் இல்லாத நோய்களுக்கு முன்னாடி அந்த பணமெல்லாம் செல்லாக்காசாக போய்விட்டது.
அதனால் தினமும் நடைப்பயிற்சி ரொம்பவே அவசியமானது. அதுவும் முடியவில்லை என்றால் வாரத்துக்கு ஒரு மணி நேரம் நாம் உடலுக்காக செலவழித்து நடை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் யோகாவும் ரொம்பவுமே நம்முடைய மனதுக்கும் உடலுக்கும் அவசியமானது. வாழ்வின் முதலான செல்வமும் முதன்மையான செல்வமும் உடல் ஆரோக்கியம் தான்.
அதனால் எப்பொழுதுமே உடற்பயிற்சி மற்றும் யோகா இந்த இரண்டு விஷயங்களையும் செய்ய வேண்டும் என்று மனதிற்குள் புகுத்தி விடுங்கள். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் போகப்போக நமக்கு இது ரொம்பவே சுறுசுறுப்பையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.