சிங்கப்பெண்ணில் அழகனின் கடைசி அத்தியாயம்.. முக்கிய முடிவெடுக்கும் தருவாயில் ஆனந்தி

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சிங்கப்பெண்ணே சீரியலில் யாரும் எதிர் பார்க்காத திருப்பம் நடைபெற இருக்கிறது. மகேஷ் ஆனந்தியை காதலிப்பது தெரிந்ததால் இருந்தே அன்பு இருதலை கொள்ளியாக தவித்து கொண்டிருக்கிறான்.

அன்பு எப்படியாவது ஆனந்தியை தன்னுடன் சேர்த்து வைத்து விடுவான் என மகேஷ் ரொம்பவே எதிர்பார்த்து கொண்டிருக்கிறான். அதேபோல் தன்னுடைய கனவு காதலன் அழகன் யாரென்று அன்பு சொல்லும் நேரத்தை எதிர்பார்த்து ஆனந்தி காத்து கொண்டிருக்கிறாள்.

அன்புக்கு இருக்கும் பிரச்சனை பத்தாது என்று அவனுடைய அம்மா அவனை ரொம்பவே நோகடித்து விட்டார். அன்பு பொய் சொல்லிவிட்டு ஆனந்தியின் ஊருக்கு போனது தெரிந்து ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்.

என்னதான் அன்புவின் அம்மாவுக்கு ஆனந்தியை பற்றி புரிந்து இருந்தாலும், அன்புவுக்கு அவருடைய உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் ஆனந்திக்கு மற்றொரு பெரிய சிக்கல் காத்து கொண்டிருக்கிறது.

முக்கிய முடிவெடுக்கும் தருவாயில் ஆனந்தி

ஆனந்தியின் குடும்பத்தின் மீது திருட்டு பழியை சுமத்த சுயம்புலிங்கம் பயங்கரமான திட்டமெல்லாம் போட்டு தோற்று விட்டான். அடுத்து ஆனந்தியின் அப்பா கொடுக்க வேண்டிய பத்து லட்சத்திற்காக அவர்களுடைய இடத்தை வாங்குமாறு கடன் கொடுத்தவரை தூண்டி விட்டிருக்கிறான்.

நாலு நாளுக்குள் பணம் வரவில்லை என்றால் இடத்தை எழுதி கொடுங்கள் என்று கடன் கொடுத்தவர் அழகப்பனை மிரட்டுகிறார். இடம் பறி போக போகும் விஷயம் ஆனந்திக்கு தெரியவே கூடாது என்று ஆனந்தியின் அம்மா சொல்கிறார்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அன்புவின் மனசாட்சி அழகனாக வந்து அவனை தொந்தரவு செய்கிறது. இன்று நீ தான் அழகன் என்று ஆனந்தியிடம் சொல்லாமல் போனால் நான் உன் முன் வரவே மாட்டேன் என மிரட்டுகிறது.

அன்புவும் ஓரளவுக்கு தைரியம் வந்து ஒரு பேப்பரில் ஆனந்தியை குடோனுக்குள் வர சொல்லி எழுதி சௌந்தர்யாவிடம் கொடுக்கிறார். சௌந்தர்யா கொடுக்கும் லெட்டரை ஆனந்தி வாங்கி படிக்கிறாள்.

ஆனந்தியின் குடும்பம் இருக்கும் பிரச்சனைக்கு மகேஷை திருமணம் செய்தால் அவளுடைய கஷ்டம் போகும். அன்புவை திருமணம் செய்தால் அவள் காதல் நிறைவேறும். அன்புவா, மகேஷா என்ற காதல் கண்ணாமூச்சி ஆட்டத்தில் ஆனந்தி என்ன முடிவெடுக்கிறாள் என்று பார்க்கலாம்.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News