Connect with us

Cinemapettai

அந்த மாதிரி வேண்டாம் என அடம் பிடிக்கும் தல.. அஜித் யோசனையில் மிரண்டு போன படக்குழு!

ajith-yuvan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்த மாதிரி வேண்டாம் என அடம் பிடிக்கும் தல.. அஜித் யோசனையில் மிரண்டு போன படக்குழு!

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு படத்திலும் ஹீரோயிசத்தை பில்டப் செய்வதற்கு மியூசிக் என்பது அவசியமான ஒன்றாக உள்ளது

அப்படிதான் நடிகர் அஜித் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த ‘பில்லா’ படத்தில் அஜித்துக்கு முக்கியமான தீம் மியூசிக்கை கொடுத்திருப்பார் இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

தற்போது மீண்டும் தல அஜித்துடன் யுவன் சங்கர் ராஜா வலிமை படத்தில் இணைந்துள்ளதால் அந்தப் படத்தைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இவரிடம் ஏற்கனவே தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில், ‘தீம் மியூசிக்கில் கிட்டார் யூஸ் பண்ணாதிங்க’ என்று கேட்டுள்ளார்.

ஏனென்றால் அஜித்தின் பெரும்பாலான படங்களில் கிட்டார் அதிகம் பயன்படுத்துவதால், அப்படி ஒரு யோசனையை யுவன் சங்கர் ராஜாவுக்கு தல அஜித் கொடுத்துள்ளார்.

ஆனால் நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித்துக்கு மாஸ் காட்டுவதற்காகவே கிட்டாரை பயன்படுத்த வேண்டிய தாயிற்று என யுவன் சங்கர் ராஜா குறிப்பிட்டுள்ளார்.

எனவே அஜித் போன படத்தில் தன்னிடம் கேட்டதை இந்த படத்தில் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்ற முடிவில் கிட்டாரே இல்லாமல் வலிமை படத்தின் பாடல்களை இசையமைத்துள்ளாராம் யுவன்.

ஏற்கனவே தல அஜித் செண்டிமெண்ட் காட்சிகளை வலிமை படத்தில் சேருங்கள் என்ற யோசனையை இயக்குனருக்கு கொடுத்தது மட்டுமல்லாமல் தற்போது இசையமைப்பாளரும் கிட்டாரை யூஸ் பண்ணாம இசையமையுங்கள் என்று சொல்லியிருப்பது. இந்தப்படத்தின் தலையின் பங்களிப்பு அதிகமாக இருப்பதை காட்டுகிறது.

ஆதலால் தான், ‘தல அஜித்தின் வலிமை படம் பிரம்மாண்டமான ஹிட் கொடுக்க போகிறது’ என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

ajith-valimai-cinemapettai

ajith-valimai-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top