தங்கல் இந்திய சினிமாவே தலையில் தூக்கி கொண்டாடிய படம். இப்படம் உலகம் முழுவதும் (சீனாவை தவிர்த்து) ரூ 750 கோடி வசூல் செய்தது.

சமீபத்தில் தான் இப்படம் சீனாவில் ரிலிஸானது, சீனாவில் இந்தியாவை விட அதிக வசூலை வாரி குவிக்கின்றது தங்கல்.

நேற்று வரை இப்படம் ரூ 450 கோடி சீனாவில் மட்டுமே வசூல் செய்துவிட்டதாம், இதன் மூலம் மொத்தம் ரூ 1200 கோடி வசூல் செய்துள்ளது.

பாகுபலி-2 உலகம் முழுவதும் தற்போது வரை ரூ 1450 கோடி வசூல் செய்ய, இதை தங்கல் முந்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.