எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம்.. பாக்ஸ் ஆபீஸில் கோடிகளை குவித்து சாதனை

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஆன எம்ஜிஆர் அடித்தட்டு மக்களுக்காக நிறைய படங்களை கொடுத்துள்ளார். இதுவே எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த பிறகு மக்களிடம் அவரது கொள்கையை எடுத்துச் செல்ல அவரது படங்களே உதவியது. அவ்வாறு எம்ஜிஆரின் சினிமா வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது ஒரு படம்.

அந்தப் படம் மலேசியா போன்று பல வெளிநாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்த படத்திற்கு எந்த பிரமோஷனும் செய்யவில்லை. ஏனென்றால் அப்போது சென்னை மாநகராட்சி போஸ்டர் ஓட்டுவதற்கான வரியை அதிகப்படியாக உயர்த்தி இருந்தது. அதுமட்டுமின்றி அந்த சமயத்தில் எம்ஜிஆர் படங்களின் போஸ்டர் ஒட்டினால் அதை கிழிக்கவும் ஆட்கள் தயாராக இருந்தனர்.

Also Read :எம்ஜிஆர் எச்சரித்தும் கேட்காத 4 நடிகர்கள்.. கோபப்பட்டு ஒதுக்கி வைத்த ஹீரோ

இதனால் எந்த பிரமோஷனும் இல்லாமல் வெளியான புகைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். எம்ஜிஆர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருந்தார். மேலும் எம்ஜிஆரே படத்தை இயக்கியிருந்தார். அதுவரை கருணாநிதியுடன் இருந்த எம்ஜிஆர் அதிமுக என்ற தனி கட்சியை தொடங்கியிருந்தார்.

மேலும், உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாகும் சமயத்தில் கருணாநிதி முதலமைச்சர் ஆக இருந்தார். மேலும் இப்படத்தில் விஞ்ஞானி, போலீஸ் அதிகாரி என இரட்டை வேடத்தில் எம்ஜிஆர் அசத்து இருந்தார். இப்படம் நன்றாக இருக்கிறது என்று தெரிந்து கொண்ட சிலர் படத்தை வெளியிடாமல் பல சூழ்ச்சிகள் செய்ய நினைத்திருந்தனர்.

Also Read :லதா ரஜினிகாந்த் வீட்டில் எம்ஜிஆர் போட்ட சண்டை.. புரட்சித்தலைவர் தந்த சர்டிவிகேட்

ஆனால் 1973இல் உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 200 நாட்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை பெற்று தந்தது. அப்போதே 4.2 கோடி வசூல் செய்து எம்ஜிஆரின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரை உலகம் சுற்றும் வாலிபன் படம் பெற்றது.

இப்படம் எம்ஜிஆரின் அரசியலுக்கு அடித்தளம் இட்டதால் தொடர்ந்து அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். மேலும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இறுதியில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற விளம்பரம் செய்திருந்தார்கள். இதனால் சமீபத்தில் இப்படத்தை அனிமேஷனில் தொடங்கலாம் என்ற யோசனையில் இருந்தனர். ஆனால் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது.

Also Read :எம்ஜிஆர் உடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட கமல்ஹாசன்.. கடைசியில் வருந்திய சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்