Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

பேரிடர் காலத்தில் துரிதமாக செயல்பட்ட முதல்வரை பாராட்டிய உயர்நீதிமன்றம்.. அசம்பாவிதங்களை குறைக்க சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசு!

தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இவர் பல்வேறு நடவடிக்கைகளால் தமிழகத்தை பட்டை தீட்டி, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் எடப்பாடியார் கொரோனா பேரிடர் காலத்திலும், புயலினால் ஏற்பட்ட பாதிப்பு காலத்திலும் துரிதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து சேதங்களை வைத்துள்ளார். இந்த நிலையில் எடப்பாடியாரின் தலைமையிலான அரசு பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டதாக உயர்நீதிமன்ற நீதிபதி பாராட்டி இருப்பது தற்போது பேசப்பட்டு வருகிறது.

அதாவது கடந்த முறை பெரும் வெள்ளத்தின் போது ஏற்பட்ட அனுபவத்தை பயன்படுத்தி, இந்த ஆண்டு பெய்த பெருமழையில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தமிழக அரசு சிறப்பாக செயலாற்றியதாக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி என். சதீஷ்குமார் கூறியதோடு, தனது பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

மேலும் மழையின் போது நீர் நிலைகள் அனைத்தும் முழுமையாக நிரம்பிய போதும், தகுந்த நேரத்தில் ஏரிகளை திறந்துவிட்டு துரிதமாக செயல்பட்டதற்காக தமிழக அரசை திமுகவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசன் பாராட்டியுள்ளார்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஸ்டாலின் எதிரான அவதூறு வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது நடந்தவை என்று கூறப்படுகிறது.

எனவே, தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு தப்பாக செயலாற்றி வரும் எடப்பாடியாருக்கு நீதிமன்றம் கொடுத்துள்ள பாராட்டு அவருடைய  மகுடத்திற்கு ஒரு வைரக்கல்லாய் மாறியுள்ளது.

edappadi-palaniswami

edappadi-palaniswami

Continue Reading
To Top