வியாழக்கிழமை, பிப்ரவரி 20, 2025

கவர்ச்சி காட்டி காசை பார்க்கும் ஹீரோயின்கள் மத்தியில் இப்படி ஒரு நடிகையா.? கயல் ஆனந்திக்கு குவியும் பாராட்டு

தற்போதெல்லாம் நடிகைகள் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராகி வருகிறார்கள். உதாரணமாக தாராளமாக கவர்ச்சியை காட்டுவது, படத்தில் தங்களுக்கு கதையே இல்லையென்றாலும் கமிட்டாகி நடிப்பது, அவ்வப்போது அட்ஜஸ்ட்மென்ட் சர்ச்சையில் சிக்குவது என இப்படி நடிகையாக வலம் வரவும், காசை சேர்த்து கல்லா கட்டவும் தங்களால் முடிந்த அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள்.

ஆனால் இவர்களுக்கெல்லாம் விதிவிலக்காக பிரபல நடிகை ஒருவர் வளம் வருவது தான் ஆச்சரியமாக உள்ளது. இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் கயல் ஆனந்தி. இப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கொள்ளைக்கொண்ட இவர், தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஒரு சில கமற்சியல் படங்கள் இவருக்கு தோல்வியை தந்தாலும், சில படங்கள் அவரை கவனிக்க வைத்தவை.

Also Read: வெற்றிமாறன் தயாரித்து வியாபாரம் ஆகாத 5 படங்கள்.. தயாரிப்பாளராய் தோற்ற இயக்குனர்

அதிலும் முக்கியமாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாளும் திரைப்படத்தில் ஜோ என்ற கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அப்படத்தில் இவரது கலகலப்பான கதாப்பாத்திரத்தை பார்த்த இளைஞர்கள் பலர், இப்படி ஒரு பெண் தான் நம் வாழ்க்கையில் வேண்டும் என்ற பிராத்தனை எல்லாம் செய்தார்கள்.

அந்த அளவிற்கு கயல் ஆனந்தி, ஜோ கதாபாத்திரத்தில் மெய்சிலிர்க்க வைத்திருப்பார். அதற்கான காரணம் ஜாதி ரீதியான வேற்றுமையை சொல்லும் வகையில் பரியேறும் பெருமாள் திரைக்கதை அமைந்த நிலையில், அதை துணிச்சலாக அவர் நடித்தது தான். இப்படி பல பாராட்டுகளை வாங்கிய இவர், திடீரென இயக்குனர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு கடந்த 2021 ஆம் ஆண்டு செட்டிலானார். அதன் பின்னர் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்த நிலையில், தனது அழகை கொஞ்சம் கூட குறையாமல் பார்த்துக்கொண்டுள்ளார்.

Also Read: முறையாக பரதநாட்டியம் கத்துக்கிட்ட 5 நடிகர்கள்.. அரங்கேற்றம் வரை அடிச்சு தூக்கிய ஜெயம் ரவி

இதனால் அவருக்கு தொடர் பட வாய்ப்புகள் வந்தது, ஆனால் அவர் தேந்தெடுக்கும் கதையானது ஜாதி ரீதியாக எடுக்கப்படும் கதையை தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அண்மையில் நடிகர் ஷாந்தனு நடிப்பில் உருவாகி திரைக்கு வந்துள்ள இராவணக் கோட்டம் படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க ஒரு சில சமூகத்தினரை சார்ந்த கதையாக வந்துள்ள நிலையில், இதிலும் ஜாதி பாகுபாடு குறித்த கதைக்களம் அமைந்துள்ளது.

இதனிடையே ஏன் நீங்கள் நடிக்கும் படங்களில் இப்படியொரு கதையை தேர்ந்தெடுக்குறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த கயல் ஆனந்தி, தான் இதுபோன்ற கதையில் நடிக்கும்போது தான் மக்களுக்கு தன்னால் இயன்ற விழிப்புணர்வை கொடுக்க முடிகிறது என தைரியமாக தெரிவித்தார். இவரது பதில், காசுக்காக படத்தில் கதை இருக்கிறதா, இல்லையா என்றுக்கூட பார்க்காமல் நடித்து வரும் நடிகைகளுக்கு மத்தியில் கயல் ஆனந்தி பல பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

Also Read: விஜய்யுடன் நடித்து முன்னேற துடித்த வாரிசு நடிகர்.. 10 நிமிட காட்சியோடு துரத்தி விட்ட லோகேஷ்

Trending News