அழகாக வேண்டும் என்று ஆபரேஷன் செய்து உயிரை விட்ட நடிகை.. அமெரிக்காவில் பரிபோன ஸ்ரீகாந்த் பட ஹீரோயின்

Srikanth movie Actress: ஆசை யாரை விட்டது என்பதற்கு ஏற்ப ஒரு நடிகை ரொம்பவே பார்க்க அழகாவும், க்யூட் ஆகவும் தான் சினிமாவிற்குள் நுழைந்தார். அதன் மூலம் தெலுங்கு படங்களில் முன்னணி ஹீரோகளுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பை பெற்றார். பிறகு தமிழில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக அறிமுகமானார். ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் இன்னும் அழகு சேர்க்க வேண்டும் என்பதற்காக விபரீத முடிவை எடுக்க ஆரம்பித்தார்.

அங்கே தான் இவருக்கு பிரச்சனையும் ஆரம்பித்திருக்கிறது. அதாவது இந்த ஹீரோயின் பார்ப்பதற்கு கொஞ்சம் குண்டாக இருந்திருக்கிறார். அதனால் அதற்கு ஏற்ற மாதிரி மருந்து மாத்திரைகள் எடுத்து உடம்பை குறைத்து இருக்கிறார். ஆனால் இதன் மூலம் இவருக்கு ஆஸ்துமா நோய் ஏற்பட்டு இருக்கிறது.

பின்பு பல வருடங்களாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிறகு உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு போயிருக்கிறார். போன இடத்தில் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு மூச்சு திணறல் வந்ததால் திடீரென்று மாரடைப்பால் 31 வது வயதில் இறந்து போய்விட்டார்.

Also read: சினிமா வாய்ப்பு தேடி வந்தும் நிராகரித்த 5 சீரியல் நடிகைகள்.. எதிர்நீச்சல் மனைவியர்கள் வாங்கும் சம்பளம்

அந்த நடிகை வேறு யாருமில்லை ஸ்ரீகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த பம்பரக் கண்ணாலே படத்தில் பூஜா கதாபாத்திரத்தில் நடித்த ஆர்த்தி அகர்வால். உடம்பை குறைக்க வேண்டும் அதன் மூலம் இன்னும் அழகு சேரும், பட வாய்ப்புகளும் தொடர்ந்து கிடைக்கும் என்ற ஆசையில் எடுத்த ஒரு விபரீதம் இவருடைய உயிரை எடுத்துவிட்டது.

இதுபோல தான் சில நடிகைகள் பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆப்ரேஷன் செய்து கொண்டு உடல் தோற்றங்களை மாற்றி வருகிறார்கள். ஆனால் இது எப்படிப்பட்ட ஒரு விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இவருடைய சம்பவமே அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. நல்ல கதாபாத்திரங்கள் இருந்தாலே போதும் மக்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய வரவேற்பை கொடுத்து கொண்டாடுவார்கள்.

Also read: வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஆர்ஜே பாலாஜி.. ரணகளமாக வந்திருக்கும் சிங்கப்பூர் சலூன் ட்விட்டர் விமர்சனம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்