தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா முழுவதுமே ஹீரோக்கள் வைத்தது தான் சட்டம். அவர்கள் 100 பேரை அடிப்பார்கள், தன்னை விட மிகவும் வயது குறைந்த ஹீரோயினுடன் டூயட் பாடுவார்கள், ஆனால், ரசிகர்கள் அதையெல்லாம் கைத்தட்டி வரவேற்கவும் செய்வார்கள்.ஆனால், தற்போதெல்லாம் அப்படி எந்த ரசிகனுமே விரும்புவது இல்லை, தனக்கு பிடித்த ஹீரோ என்றால் கூட படத்தில் குறைந்தபட்ச லாஜிக்காவது இருக்க வேண்டும் அவர் 10 பேரை அடிக்க, என்ற எண்ணத்தில் தான் படம் பார்க்க வருகின்றார்கள்.ஒரு காலத்தில் ரஜினி மன்னன், அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா, அருணாச்சலம் என தொடர் வெற்றிகளால் தனக்கென்று தனி சாம்ராஜித்தை உருவாக்கி வைத்திருந்தார்.ஆனால், பாபா அவரை கொஞ்சம் உலுக்கிப்பார்த்தது, தான் என்ன நடித்தாலும் ரசிகன் பார்ப்பான் என நம்பியிருந்த ரஜினி முதல் அடி, அதை தொடர்ந்து சிவாஜி, எந்திரன் என சென்றாலும் மீண்டும் லிங்காவில் பெரிய அடி, இன்றைய ட்ரெண்டிற்கு நாம் மாறிய ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் ரஜினி கபாலியாக அவதரித்து மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் ஆளுமையில் இருப்பவர்கள் விஜய், அஜித், விக்ரம், சூர்யா. இவர்கள் எல்லோருமே தற்போது பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்து வருபவர்கள்.இதில் அஜித், விஜய் தங்களுக்குள் போட்டி என்று எப்போது உருவானதோ அன்றிலிருந்து இன்று வரை ஒரே மசாலா, மாஸ் என குறுகிய வட்டத்திற்குள் தான் சுற்றி வருகின்றனர்.அவர்களுக்கு இருக்கும் மாஸ் ரசிகர்கள் கூட்டம் வேதாளம், தெறியை கூட பிரமாண்ட வெற்றியாக்குகின்றது.

ஆனால், ரசிகர்கள் இவர்களிடம் விரும்புவது வெறும் மாஸ் மட்டுமில்லை, அவர்கள் கண்டிப்பாக வேறு தளத்தில் பயணிக்கவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.அதற்கு பைரவா, விவேகம் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எழுந்த அதிப்தியே ஓர் உதாரணம், மேலும், சூர்யா, விக்ரம் கதைகளுக்காக நடித்த போது அவர்களுக்கு இருந்த புகழ் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.ஆனால், அவர்களுமே மாஸ் வட்டத்திற்கு வந்த போது அஞ்சான், ராஜபாட்டை, மாஸ், 10 எண்றதுக்குள்ள ஆகிய படங்களுக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்கள் உலகம் அறிந்ததே.தற்போதெல்லாம் எந்த ரசிகனும் தன் ஹீரோ தரமான கதையில் நடிக்க வேண்டும் என்றே விரும்புகிறான், அதை ரஜினி உணர்ந்தது போல், இளம் தலைமுறை நடிகர்களும் உணர்வார்களா? பார்ப்போம்.