புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நயன், விக்கி சந்தோஷமா இருக்க நான் தான் காரணம்.. ஹீரோ சொன்ன ஷாக் தகவல்

Nayanthara : இப்போது நட்சத்திர ஜோடிகளாக வளம் வருபவர்கள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். சமூக வலைத்தளங்களில் இவர்களது புகைப்படம் தான் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கிறது. இவர்கள் காதல் மலர்வதற்கு காரணமாக இருந்த படம்தான் நானும் ரவுடிதான்.

இந்த படத்தின் காட்சிகள் நயன்தாரா திருமண படத்தில் பயன்படுத்தப்பட்டதால் பெரிய பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது. தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக நயன்தாரா குற்றம் சுமத்தி இருந்தார். ஆனாலும் அந்த திருமண படத்தில் நானும் ரவுடிதான் காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து நயன்தாரா மீது தனுஷ் வழக்கு போட்டுள்ளார். ‌ இப்படி இருக்கும் சூழலில் நயன் மற்றும் விக்கி இருவரும் திருமணம் செய்து கொண்டு இப்பொழுது மகிழ்ச்சியாக இருப்பதற்கு நான் தான் காரணம் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார் ஹீரோ மிர்ச்சி சிவா.

நயன், விக்கி கல்யாணத்திற்கு காரணமாக இருந்த ஹீரோ

லோ பட்ஜெட் படங்கள் மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மிர்ச்சி சிவா சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது முதன் முதலில் விக்னேஷ் சிவன் தன்னிடம் தான் நானும் ரவுடிதான் படத்தின் கதையை கூறினார்.

ஆனால் அப்போது தன்னால் பண்ண முடியாத சூழலில் அதன் பிறகு நயன்தாராவிடம் விக்னேஷ் சிவன் இந்த கதையை கூறியிருக்கிறார். ஒருவேளை இந்த படத்தில் நான் நடித்திருந்தால் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரின் காதல் கைகூடி இருக்க வாய்ப்பு இல்லை.

ஒரு விஷயம் நமக்கு கிடைக்கவில்லை என்றால் கண்டிப்பாக வேறொரு நல்ல விஷயத்திற்காக தான் இருக்கும். அவ்வாறு இப்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நானும் ஒரு காரணம் என்று பெருமையுடன் கூறியிருந்தார் மிர்ச்சி சிவா.

- Advertisement -

Trending News