சூரியிடம் தஞ்சமடைந்த தளபதியின் வாரிசு.. ரெண்டு இளம் ஹீரோக்கள் நிராகரித்ததால் கடும் அப்செட்

Soori: என்னதான் அப்பா உச்சத்தில் இருந்தாலும் தனக்கு என்ன பிடித்து இருக்கிறதோ, அதை தான் செய்வேன் என்று நினைப்பது மிகவும் அபூர்வமான ஒரு விஷயம். ஏனென்றால் பொதுவாக அப்பா ஒரு விஷயத்தில் வளர்ந்து நிற்கிறார் என்றால் அதன் பேரும் புகழையும் வைத்து அதில் வெற்றி பெற நினைப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.

ஆனால் தளபதியின் வாரிசு மட்டும் இதற்கு விதிவிலக்காக தனக்கு பிடித்த இயக்குனர் பாதையை தேர்ந்தெடுத்து அதற்காக வெளிநாட்டில் சென்று மேற்படிப்பு அனைத்தையும் முறையாக கற்றுக் கொண்டு தற்போது தமிழ் சினிமாவில் படம் எடுப்பதற்கு தயாராக நிற்கிறார்.

தலைதெறித்து ஓடும் இளம் ஹீரோக்கள்

உச்சத்தில் இருக்கும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக மாறிய நிலையில் முதல்முறையாக கை கொடுத்து தூக்கிவிட நினைத்தது லைக்கா நிறுவனம். அந்த வகையில் தயாரிப்பாளர், இயக்குனர் என்று எல்லாம் அமைந்து வந்தாலும் கதைக்கு ஏற்ற ஹீரோக்கள் யாரும் கமிட் ஆகாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது சஞ்சய் இயக்கப் போகும் படத்தில் முதலாவதாக நடிக்கப் போகிறது கவின் என்று பல செய்திகள் உலாவி வந்தது. ஆனால் அதன் பிறகு இது பெரும் வதந்தி தான் என்று சொல்லி விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கப்போவதாக பேச்சு வார்த்தைகள் வந்தது. ஆனால் தற்போது அவரும் இந்த படத்தை வேண்டாம் என்று நிராகரித்து விட்டார்.

இதனால் கடும் அப்செட்டில் இருக்கும் தளபதியின் வாரிசான சஞ்சய் தற்போது கதாநாயகனாக வெற்றி பெற்று வரும் புரோட்டா சூரியிடம் தஞ்சமடைந்திருக்கிறார். விஜய்யின் மகன் என்பதால் சூரியும் அதற்கு ஏற்ற மரியாதை கொடுத்து கதை முழுவதையும் கேட்டிருக்கிறார். ஆனால் நடிப்பதற்கு சம்மதம் கொடுக்காமல் தயக்கத்துடனே எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.

காரணம் தற்போது வெற்றி படங்களை கொடுத்துட்டு வந்து மக்கள் மத்தியில் ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் சூரிக்கு, சஞ்சய் கதையின் மேல் நம்பிக்கை இல்லை. அதனால் இதில் நடித்தால் எப்படி இருக்கும் என்ற நடிப்பதற்கு தயக்கம் காட்டி வருகிறார். காமெடியனாக இருந்து ஹீரோவான இவரும் தற்போது சஞ்சய் வைத்திருக்கும் கதையில் நடிப்பதற்கு யோசிக்கிறார் என்பதால் இது என்ன நமக்கு வந்த மிகப்பெரிய சோதனை என்று தொடர் புறக்கணிப்பால் ரொம்பவே அப்சட்டில் இருக்கிறார்.

ஜேசன் சஞ்சய் ஏற்கனவே சில ஷார்ட் பிலிம் வீடியோக்களை எடுத்து அதில் பாராட்டுகளையும் வாங்கி இருக்கிறார். ஆனாலும் ஒரு முழுமையான படத்தை எடுக்க முடியாமல் தவித்து வருகிறார். தயாரிப்பாளர், கதை, இயக்குனர் என்று எல்லாம் தயாராக இருந்தாலும் ஹீரோக்கள் யாரும் நடிக்க முன்வராமல் இருப்பதால் தொடர் ஏமாற்றங்களை பார்த்து வருகிறார்.

தற்போது விஜய்யும் சினிமாவை விட்டு முழுமையாக விலகும் இந்த நேரத்தில் மகனுக்கும் சரியாக வாய்ப்பு கிடைக்காமல் அல்லல் படுவதால் அடுத்தடுத்து இவருடைய கேரியர் எந்த மாதிரியாக போகும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

Next Story

- Advertisement -