ஹேமா கமிட்டி அறிக்கையில் பாதி பக்கத்தை காணோம்.. யார் அந்த முக்கிய நடிகர்கள், கொந்தளிக்கும் ராதிகா

Radhika Sarathkumar: நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவை உலுக்கி வருகிறது. ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்று ஒரு சொலவடை சொல்வது போல சினிமாவில் ஆங்காங்கே நடக்கும் டார்ச்சர்களை அவ்வப்போது சில நடிகைகள் மறைமுகமாக சொல்லிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் யார் அந்த நடிகர்கள் என்று முகத்திரையை கிழிக்கும் விதமாக தில்லாக போட்டு உடைத்தது மலையாள சினிமா நடிகை தான்.

இதனால் இவரை தொடர்ந்து பல ஆர்டிஸ்ட்களும் தற்போது வாய் திறக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் சில நடிகைகள் நாங்களும் இதையெல்லாம் தாண்டி அனுபவித்து தான் வந்திருக்கிறோம். இதனால் எந்த அளவிற்கு சிக்கல்களை பார்த்து தொல்லைகளை அனுபவித்து வந்திருப்பதை தற்போது பகிரங்கமாக பேசத் தொடங்கி விட்டார்கள்.

பாயிண்ட் பாயிண்டாக ராதிகா வைத்த கோரிக்கைகள்

அந்த வகையில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கலக்கிக் கொண்டு வரும் நடிகை ராதிகா இதற்கு குரல் கொடுக்கும் விதமாக போர் கொடி தூக்க ஆரம்பித்து விட்டார். தற்போது ராடன் நிறுவனம் தயாரித்துள்ள தாயம்மா குடும்பத்தார் என்னும் தொடரில் இருக்கும் சின்னத்திரை சீரியல்களை வைத்து சென்னை சைதாப்பேட்டை சிஐடி நகரில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் நடிகர்கள் நடிகைகளை வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார்.

இதில் இவர் குறிப்பிட்டது ஹேமா கமிட்டி தொடர்பாக நடக்கும் பிரச்சினைகளை குறித்து கடந்த நான்கு நாட்களுக்கு முன் இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மையா என்று சிஐடி தரப்பிலிருந்து தொலைபேசி வாயிலாக என்னிடம் கேட்டார்கள் அதற்கு நானும் கூற வேண்டிய பதில்களை கூறி இருக்கிறேன். ஆனால் நான் இதுவரை புகார் எதுவும் அளிக்கவில்லை. ஏனென்றால் தற்போது தமிழ் சினிமா துறையில் படித்தவர்கள் அதிகமாக வந்துள்ளனர். இதனால் இந்த பிரச்சனைகள் இங்கு குறைந்து இருக்கிறது.

செல்பி வீடியோ கேட் தொந்தரவு பண்ணக்கூடாது

மேலும் கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நடவடிக்கையின் பெயரில் விசாரணை நடந்து வருகிறது. இதே மாதிரி தமிழ்நாட்டிலும் இந்த மாதிரி விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். அப்பொழுது ராதிகாவிடம் உங்களுக்கும் இது போன்ற விஷயங்கள் நடந்திருக்கிறது என்றால் ஏன் அதைப் பற்றி வாய திறக்காமல் அமைதியாக இருந்தீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு எங்களுடன் சில ஹீரோக்கள் வந்து நிற்பார்கள். சில ஹீரோக்கள் எங்களை கண்டுகொள்ள கூட மாட்டார்கள். அப்படியே நாங்கள் எங்களுடைய பிரச்சனையை கோர்ட்டுக்கு கொண்டு போனால் பல வருடங்களாக இழுத்தடிக்கும் தவிர எங்களுக்கு அங்கு எங்கேயும் நியாயமும் கிடைக்காது. இன்னும் சொல்ல போனால் நிர்பயா வழக்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இழுத்தடித்து அதன் பிறகு தான் தண்டனை கிடைத்தது.

அதனால் இதற்கு ஒரே வழி இந்த மாதிரி நடிகைகளுக்கு எந்தவித பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். நடிகைகளை அவர்கள்தான் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். ஆனால் முன்பு இருந்ததற்கு இப்பொழுது எவ்வளவோ பரவாயில்லை. ரொம்பவே மாறி இருக்கிறது ஆனாலும் தொடர்ந்து எங்கேயோ நடக்கிற சின்ன சின்ன தவறுகள் நடப்பதையும் தவிர்க்கும் படியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

அரசியலுக்கு வருமுன் இதை கவனிக்க வேண்டும்

அதுமட்டுமில்லாமல் தற்போது சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கு அடுத்தபடியாக இருக்கும் மிகப்பெரிய ஆசை அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்பதுதான். அப்படி அரசியல் ஆசையில் இருப்பவர்கள் ஏன் இந்த மாதிரி நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து பெண்களுக்கு சப்போர்ட்டாக வர முன் வருவதில்லை. இதைப் பற்றி பெண்கள் வாயை திறந்தாலும் அவர்கள் மீது தான் குற்றம் சொல்லுகிறது தவிர ஆண்களை இந்த சமூகம் விட்டு விடுகிறது.

அத்துடன் மலையாள சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர்கள் லிஸ்டில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்பதற்கு ஏற்ப நடிகர்கள் கொடுத்த டார்ச்சர்கள் அப்படியே பாதியிலே காணாமல் போய்விட்டது. யார் அந்த முக்கிய நடிகர்கள் என்பதையும் கண்டுபிடித்து அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை மூலம் இனி இந்த மாதிரியான ஒரு தொந்தரவுகள் பெண்களுக்கு எங்கேயும் எந்த இடத்திலும் நடக்காத படி தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்களிடம் கொந்தளித்து பேசி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து இதற்கு ஒரு தீர்வாகவும் இனி இந்த மாதிரி பிரச்சனை வராமல் இருப்பதற்காக அந்த நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளுக்கு அவர்கள் தைரியமாக எடுக்கும் விஷயங்களுக்கு சப்போர்ட்டாக புகார் அளிக்கும் போது அதற்கு உடனடியாக விசாரிக்க முன்வர வேண்டும். ஏனென்றால் காலம் கடந்த பிறகு அதை நிரூபிப்பதற்கும் அதற்கு தண்டனை வழங்குவதற்கும் எந்தவித சாட்சியும் இல்லாமல் அழிந்து போய் விடுகிறது.

அத்துடன் அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டால் பெண்கள் டார்ச்சை அனுபவிக்கும் பொழுது செல்ஃபி வீடியோ என எடுத்துக்கிட்டா இருப்பாங்க. அதனால் தயவு செய்து இந்த மாதிரியான கேள்விகளை முன் வைக்காமல் அவர்கள் சொல்ல வருவதற்கு பின் என்ன இருக்கிறது என்று ஆலோசித்து அதற்காக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ராதிகா பத்திரிக்கையாளர்களிடம் பேசி இருக்கிறார்.

Next Story

- Advertisement -