காதலர்கள் யாரும் கடைசியாக சந்தித்துக் கொள்வதில்லை. அவர்கள் கடைசி வரையிலும் ஒன்றாகவே வாழ்வதுண்டு. அந்த வகையில், நம்ம தல தோனியும், சாக்ஷியும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். ஒரே பள்ளியிலும் படித்துள்ளார்கள். இருவரின் பெற்றோர்களும் அலுவலகத்திலிருந்தே நல்ல நண்பர்கள்.

படங்களில் வரும் கதையைப் போன்று, இருவரும் காதலர்களாக மாறிய பிறகு இருவரது குடும்பமும் வேறொரு இடத்திற்கு சென்றுவிட்டனர். அதன் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். இதையடுத்து, தோனி – சாக்ஷி இருவரும் கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு 2 வயதில் ஷிவா தோனி என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், தோனி-சாக்ஷி இருவரும் தங்களது 7வது ஆண்டின் திருமண நாளில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளனர்.

தோனி – சாக்ஷி இருவரும் தங்களது 7வது ஆண்டின் திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.