இலங்கை அணிக்கு எதிரான இராண்டாவது டெஸ்ட் தொடரில்,  இந்திய வீரர்கள் தவான், முகுந்த், ராகுல் இந்த மூன்று வீரர்களில் யாரை தேர்வு செய்வது என கேப்டன் கோலிக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. இதில் கோலி தலைமையிலான இந்திய அணி, அந்நிய மண்ணில் இதுவரை இல்லாத அளவு இமாலய வெற்றியை ( 304 ரன்கள் ) பதிவு செய்து சரித்திரம் படைத்தது.
இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கொழும்புவில் துவங்குகிறது. இதில் இந்திய அணியின் துவக்க வீரர்களை தேர்வு செய்வதில் கேப்டன் கோலிக்கு பெரும் குழப்பத்தை இந்திய வீரர்களான தவான், முகுந்த், ராகுல் அளித்துள்ளனர்.

virat kholiமுதல் டெஸ்ட் தொடரில் முதல் இன்னிங்சில், தவான் 190 ரன்கள் விளாசினார். அதேபோல இரண்டாவது இன்னிங்சில் அபினவ் முகுந்த அரைசதம் அடித்து கைகொடுத்தார். இந்நிலையில் வைரஸ் காய்ச்சலில் இருந்து முழுமையாக குணமடைந்த ராகுல், மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளார்.

இதனால் இந்திய அணியில் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் போட்டியில்  துவக்க வீரர்களாக யாரை தேர்வு செய்வது என பெரும் குழப்பத்தில் உள்ளார் கோலி. ஆனால் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ராகுலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதனால், தவான், ராகுல் ஆகியோர் இரண்டாவது டெஸ்டுக்கு தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.