பாலியல் தொல்லை என்பது குழந்தை முதல் மூதாட்டிகள் வரை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. 70 வயது மூதாட்டியை பாலியல் கொடுமை செய்து கொன்ற கொடுமையும் 3 வயது குழந்தையை துன்புறுத்தி கொன்ற கொடுமையும் நம் நாட்டில்தான் அரங்கேறியுள்ளது.

ஓடும் பஸ், ஆட்டோ, கார் என்று தொடர்ந்து வரும் இந்த தொல்லை தற்போது இரயிலிலும் நிகழ்ந்துள்ளது. ஆம் நேற்று மும்பையில் ஒரு சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமையை பற்றிய செய்திதான் அது.

எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருத்தி மாலை டியுஷன் முடித்துவிட்டு வீட்டிற்கு வருவதற்காக இரயிலில் பயணித்திருக்கிறாள்.

girls

வழக்கமாக பெண்கள் பெட்டியில் தனது தோழிகளுடன் இரயிலில் பயணிக்கும் அவள் நேற்றும் அந்த பெட்டியில் வழக்கம் போல் தோழிகளுடன் பயணித்திருக்கிறாள்.

தோழிகள் ஒவ்வொருவரும் அவரவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கிவிட்டனர். இறுதியாக அந்த சிறுமி மட்டும் தன்னந்தனியே இரயில் பேட்டியில் பயணத்தை தொடர்ந்துள்ளாள்.

சத்திரபதி சிவாஜி மகாராஜ் நிலையத்திலிருந்து ரெயில் புறப்பட்டு சென்ற போது திடீரென்று ஒரு முகம் தெரியாத நபர் தனியே இவள் அமர்ந்திருப்பதை கண்டு ஓடும் ரயிலில் ஏறியுள்ளான்.

rape

அவனை கண்டு பயந்த சிறுமி தன்னை காப்பாற்ற சொல்லி கத்தி உதவி கேடுள்ளாள், ஆனால் ஓடும் ரயில் என்பதால் ஒரு உதவியும் கிடைக்காமல் என்ன செய்வதென்று புரியாமல் பதற்றம் அடைந்துள்ளாள்.

மேற்கொண்டு அந்த மர்ம நபர் அந்த பெண்ணை நெருங்கி வந்து அவளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளான். இதனால் என்ன செய்வதென்று புரியாத அந்த சிறுமி மானத்தை காக்க உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடும் ரயிலிலிருந்து குதித்துள்ளாள்.

சிறுமி குதித்ததை கண்ட அந்த மர்ம நபர் பயந்துபோய் உடனே அடுத்த ஸ்டேஷனில் யாருக்கும் தெரியாமல் இறங்கி ஓடிவிட்டான்.

rap

அதிஷ்டவசமாய் பெரிய காயங்களின்றி சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளாள் அச்சிறுமி. இது குறித்து மும்பை போலிஸ் வழக்கு பதிந்து அந்த மர்ம நபரை தேடி வருகிறது. இரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காமிரா மூலம் அவனை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறது காவல் துறை.

இச்சம்பவம் குறித்து மும்பை பெண்கள் பாதுகாப்பு சங்கம் தங்கள் பங்கிற்கு வழக்குகள் தொடர்ந்துள்ளனர். விரைவில் அந்த நபரை கைது செய்வதாக காவல் துறையினர் உறுதி அளித்துள்ளனர்.

rape

மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடரா வண்ணம் இரயில் நிலையங்கள் மற்றும் பொதுவிடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனராம்.

பலர் புழங்கும் பொதுவிடங்களிலேயே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை தொடர்வது அனைவர் மனதையும் வேதனைக்குள்ளாக்குகிறது.