ஆரியுடன் ஜோடி போட்ட பிக்பாஸ் பிரபலம்.. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி எப்படி நாளுக்கு நாள் பிரபலமாகி கொண்டிருக்கிறதோ, அதே போல் அதிலுள்ள ஒவ்வொரு போட்டியாளர்களும் பயங்கர ரீச் ஆகி கொண்டிருக்கின்றனர் என்றே கூறலாம்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் நடிகர் ஆரி. என்னதான் இவர் வீட்டில் உள்ள அனைவரிடமிருந்தும் பெரும் வெறுப்பை சம்பாதித்தாலும், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார்.

இதற்கு உதாரணம் இன்று வரை நடத்தப்பட்ட எல்லா நாமினேஷன்களிலும் ஆரி இடம்பெற்றிருந்தாலும் இன்றுவரை வீட்டினுள் தான் இருக்கிறார் என்பதுதான். இந்த நிலையில் ஆரியும், பிக் பாஸ் சீசன் 2 பிரபலமான ஐஸ்வர்யா தத்தாவும் இணைந்து நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அதாவது ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா தத்தா. ஆனாலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார் ஐஸ்வர்யா.

தற்போது ஐஸ்வர்யா தத்தா, ஆரி அர்ஜுனனும் இணைந்து நடித்த ‘அலேகா’  என்ற திரைப்படத்தின் போஸ்டர்  இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தை எஸ் எஸ் ராஜமித்ரன் இயக்கியுள்ளாராம்.

எனவே, இந்த இரண்டு பிக்பாஸ் பிரபலங்களும் இணைந்து  நடித்துள்ள படத்திற்கான ஆர்வம் மக்களிடையே அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.