ஹீரோ ஆதிக்கத்தை உடைத்த முதல் தமிழ் படம்.. கமல் நடித்து 150 நாட்கள் ஓடி சாதனை

60, 70களில் ஹீரோக்களுக்காக தான் கதைகள் எழுதப்படும். அவர்களை வைத்து தான் மற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்தார்கள். இவ்வாறு படங்கள் வெளியான நிலையில் ஹீரோ ஆதிக்கத்தை உடைத்து ஒரு தமிழ் படம் வெளியானது. தற்போது வரை அந்த படம் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கிறது.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என மாபெரும் ஹீரோக்களை உருவாக்கியவர் இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர். இவர் ஹீரோக்களுக்கு வாழ்வு தந்தாலும் தமிழ் சினிமாவில் ஒரு பெண்ணின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துமான படங்களையும் கொடுத்துள்ளார்.

Also Read :தூங்கு மூஞ்சி அஸ்வினை தூக்கிவிடும் கமல்ஹாசன்.. இனியாவது வாய்க்கு பூட்டு போட்டா நல்லது

அந்த வகையில் 1974 இல் வெளியாகி 150 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்ற படம் அவள் ஒரு தொடர்கதை. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு, பெங்காலி, இந்தி, கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் இப்படம் மீண்டும் எடுக்கப்பட்டது.

தந்தை குடும்பத்தை நிர்கதியாக விட்டுப் போக குடும்ப பாரம் மொத்தமாக கவிதா மேல் விழுகிறது. இருளை நீக்க தன்னை அழித்துக் கொள்ளும் மெழுகுவத்தி போல் கவிதா தனது குடும்பத்திற்காக உழைக்கிறார். திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பத்திற்காகவே வாழ்கிறார்.

Also Read :முதல் படத்திலேயே சக்கை போடு போட்ட 5 நடிகைகள்.. கமல்ஹாசனால் சினிமாவை விட்டே ஓடிப்போன நடிகை

நம் மனதில் அழிக்க முடியாத தாக்கத்தை உண்டாக்கிய படம் தான் அவள் ஒரு தொடர்கதை. கவிதா கதாபாத்திரத்திற்கு மிகவும் சரியாக பொருந்தி இருந்தார் சுஜாதா. மேலும் இப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்திருந்தார்.

இவர்களைத் தவிர ஸ்ரீப்ரியா, பட்டாபட்டி ஜெயலட்சுமி, விஜயகுமார், ஜெய்கணேஷ் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாலச்சந்தரின் பல அற்புதமான படங்களில் அவள் ஒரு தொடர்கதை படமும் ஒரு முத்தாக அமைந்தது.

Also Read :ரஜினி செய்த பெரிய தவறு.. செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன பாலச்சந்தர்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்