Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்தியாவில் முதல் முறையாக நடிகைகளுக்கென்று ஆரம்பிக்கப்படும் முதல் அமைப்பு.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்தியாவில் முதல் முறையாக நடிகைகளுக்கென்று ஆரம்பிக்கப்படும் முதல் அமைப்பு.

கேரளமாநிலம் தெய்வத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட மாநிலமாகும். அங்கு கல்வி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அனைவரும் கடைப்பிடித்து வருகின்றனர்.

மாநிலத்தின் தேவை என்றால் அவர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றாக இணைந்து போராடி வெற்றிப் பெறுவர்.

திரைத்துறையில் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. அனைவரும் அஜெஸ்ட்மென்ட் செய்தால்தான் சினிமாவில் வாய்ப்பு என்பது போய், சில நடிகைகள் காரில் கடத்தி கற்பழிக்கவும் படுகின்றனர்.

இந்த சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேரள மாநில திரைத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக மலையாள நடிகைகள் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பை ஏற்படுத்த உள்ளனர்.

இந்தியாவில் முதல் முறையாக நடிகைகளுக்கென்று ஆரம்பிக்கப்படும் முதல் அமைப்பாகும். மலையாள நடிகைகள் மஞ்சு வாரியர், ரீமா கல்லிங்கல், பீனா பால், பார்வதி மேனன் உள்ளிட்டோர் இந்த அமைப்பை செயல்படுத்த உள்ளனர்.

மஞ்சு வாரியர், பீனா பால், பார்வதி, விது வின்சன்ட், ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து இந்த அமைப்பை வழிநடத்தவுள்ளனர்.

பெண் கலைஞர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, அதற்கான ஆதரவைப் பெற நேற்று மாலை கேரள முதல்வர் பினராயி விஜயனை இந்த அமைப்பினர் சந்தித்தனர்.

நல்ல விஷயம் தான். அப்பிடியே தற்கொலை பண்ணிக்கற நினைக்கும் நடிகைகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்ங்க.. சிஸ்டர்ஸ். மொழிக்கு அப்பாற்பட்டு பல நடிகைகள் தற்கொலை செய்துகொள்வது மிகச்சாதாரணமாக நடக்கிறது. இது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top