fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

டிக்கெட் டு பினாலே வெற்றியாளர் இவர்தான்..பிக்பாஸ் சீசன்5-யின் முதல் பைனல் லிஸ்ட்!

big boss ticket

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டிக்கெட் டு பினாலே வெற்றியாளர் இவர்தான்..பிக்பாஸ் சீசன்5-யின் முதல் பைனல் லிஸ்ட்!

விஜய் டிவியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் நேரடியாக பைனலுக்கு சென்று விடலாம்.

இதில் நேற்றைய நிகழ்ச்சியில் சிபி, அமீர், சஞ்சீவ் ஆகிய 3 பேரும் போட்டியிட்டனர். இதில் சஞ்சீவ் நடத்தப்பட்ட போட்டியில் தோல்வியை சந்தித்து டிக்கெட் டு பினாலே டாஸ்க்கிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அமீர் மற்றும் சிபி இருவருக்கும் இடையே டிக்கெட்டு பினாலே டாஸ்க் இன்று நடைபெற உள்ளது.

ஆனால் அமீர் இந்தக் டிக்கெட் டு பினாலே டாஸ்கில் வெற்றி பெற உள்ளார். ஆகையால் அவருக்கு இணையத்தில் பிக்பாஸ் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றர். எனவே வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த அமீர் போட்டி என்று வந்துவிட்டால் போட்டியாளர்களுக்கு ஈடு கொடுத்து தன்னுடைய முழு முயற்சியையும் காட்டுவார்.

அத்துடன் இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த சில தினத்திலேயே பவானிக்கு ரூட் போட்டு கன்டன்ட் கொடுக்கும் கன்டஸ்டன்ட்ஸ் ஆகவே மாறிவிட்டார். இதனால் ரசிகர்களும் அமீரின் செய்கையை ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.

அத்துடன் கடந்து வந்த பாதை டாஸ்க்கில் போது, அமீர் தன்னுடைய வாழ்க்கை நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டதன் மூலம் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதையும் கவர்ந்து விட்டார்.

இதனால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனாலும் ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள். இருப்பினும் ராஜு மற்றும் பிரியங்கா இருவரில் ஒருவர்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் அதாவது ஃபைனல் ரவுண்டுக்கு அமீர் முதல் ஆளாக நுழைந்துள்ளார். இருப்பினும் இன்று நடைபெறும் டாஸ்க் எப்படி இருக்கும், அதை அமீர் எப்படி சாதுர்யமாக விளையாடி வெற்றிப் பெற்று பைனலுக்கு செல்லும் டிக்கெட்டை பெறுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top